கிறுக்கி வைத்த காகிதத்தை
பதிப்பகத்தாரிடம் கொடுத்தேன்
சமையல் புத்தகம் எழுதிப்பார்
சக்கைப்போடு போடும் என்றார்
சாம்பார் செய்வது எப்படி?
படித்துப்பார்த்த பதிப்பகத்தார்
உப்பு உறைப்பு இல்லையே
அசைவ சமையலுக்குத்தான்
அடிபிடி கிராக்கி
செட்டி நாட்டு சமயலுக்கோ
செம கிராக்கி
அடுத்த நாளே
எழுதிக்கொடுத்தேன்
சிங்கள நாட்டு அசைவ சமையல்
செய்வது எப்படி?
படித்த பதிப்பகத்தார்
பேந்த பேந்த விழித்தார்
செஞ்சிக்கு வந்த சிங்கள நாட்டு
தலைமை சமையல்காரர்
சொன்னதைத்தான் எழுதிவைத்தேன்
அப்பாவி ஈழத் தமிழர்களை
அப்படியே வறுத்து தின்றாரே
கொத்து கொத்தாக
கொத்துக்கறிப் போட்டாரே
அது எப்படி? என்பதைத்தான்
தொலைக்காட்சியில்
அவர் சொன்னதைத்தான்
அப்படியே எழுதி கொடுத்தேன்
சிங்கள நாட்டு அசைவச் சமையல்
செய்வது எப்படி? என்று.
(இப்பதிவு சில தளங்களில் சமையல் பகுதிகளில் இடம் பெற்றுள்ளது
அது என் தவறல்ல ஆயினும் வருந்துகிறேன்)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |