google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பயந்தாங்கொள்ளி

Wednesday, September 05, 2012

பயந்தாங்கொள்ளி



சாதிக்கொரு தலைவர்கள்
கற்சிலைகளாக நிற்கும்   
வீதிகளில் போகும்போது....
  
கண்ணை மூடிக்கொண்டு
கடந்து போய்விடுவேன்
நான் ஒரு பயந்தாங்கொள்ளி

சிலையாக நிற்ப்பவர்
எந்த சாதியோ?
நான் எந்த சாதியோ?

(அவர்கள் கேட்டார்களா
இறந்தபிறகு எங்களுக்கு
சிலை வையுங்கள் என்று?)

அருகில் போகும்போது
அவர் எதுவும் சொல்லமாட்டார்
அது தெரியும் எனக்கு
ஆனாலும்
நான் ஒரு பயந்தாங்கொள்ளி

காக்கை அமர்ந்து
பனம்பழம் விழுந்த
கதை போல்...

சிலை அருகில்
நான் போகும்போது
சரியில்லாத
சிமெண்டு கலவையால்  
அவர் சேதாரமானால்...

அருகில் போனதால்
அவப்பெயர் வரலாம்
அதனால்
கலவரக் கொலையும்
காட்டுக் கொடூரமும்
கூத்தாடி வரலாம்

நான் ஒரு பயந்தாங்கொள்ளி 
*****************************
காணொளி-Ondre maanthar Kulam 


Thanks-YouTube-Published on Apr 19, 2012 by breezyawaaz




Bharathiyar Paadalgal - Nenjil Uramumindri (Oldies) by snehanuk
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1