google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வெடித்து சிதறிய உயிர்கள்

Wednesday, September 05, 2012

வெடித்து சிதறிய உயிர்கள்



வெடித்து சிதறியது
பண்டிகை காலத்தில்
வேடிக்கை காட்ட
அடுக்கி வைத்திருந்த
பட்டாசுகள் மட்டுமல்ல

அங்கே

வாழ்வைத்தேடி  
வேலை செய்த
உயிர்க்களும்தான்

அழுவார்கள்
ஆறுதல் சொல்வார்கள்
அங்கே
உயிரிழந்த
ஆத்மாக்களுக்கு
நிவாரணம் தருவார்கள்

பட்டாசு ஆலைக்குத்தான் 
பாதுகாப்பில்லை
அணு உலைகளையாவது 
ஆபத்து இல்லாமல் செய்யுங்கள்

வருமுன் காத்திட
இங்கே எவருமில்லை
இந்த தொழிலோ
எப்போதும் தொல்லை
மாற்று தொழிலுக்கு
ஏற்றம் தருவாரில்லை

சந்திரனுக்கும் செவ்வாய்க்கும்
சென்று வரும் சாத்தியம் உண்டு
வருமுன் விபத்துக்களை
காத்திடும் வழி அறியாயோ?


மின்னணுவில் வானவேடிக்கை
மின்னணுவில் வெடிச்சத்தங்கள்
படைத்திடுவோம் மகிழ்ந்திடுவோம்

இனிவரும் காலங்களில்
காதைக் கிழிக்கும் சப்தம்
கரிமருந்து புகை நாற்றம்
வெடிமருந்து வேடிக்கைகளுக்கு
விடை கொடுத்திடுவோம்

இன்னுயிர் இழப்பு   
இல்லாமல் செய்திடுவோம்
புகையும் நெருப்பும் இல்லாத
புது யுக பண்டிகை காண்போம்   

  
இங்கே சில உங்கள் பார்வைக்கு 
Thanks-YouTube-Uploaded by on Feb 2, 2011

Thanks-YouTube_Uploaded by on Jan 18, 2009



Thanks-YouTube_Uploaded by on Oct 27, 2010



Thanks-YouTube_Uploaded by efireworks on Jun 23, 2009



 
Thanks-YouTube_Uploaded by gahanx3 on Mar 9, 2011

LasershowThanks-YouTubeUploaded by on Oct 3, 2010

நெருப்பும் புகையும் வெறுப்பை  தருமே 
இன்னொரு  உலகம் படைப்போம்

Thanks-YouTube-Uploaded by phamcongut on Feb 10, 2010


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1