(இது
நிஜத்தின் மீது
நான் கொண்ட காதல்)
முகம் ஓன்று
பிரதிபலிக்கும்
பிம்பங்கள் இரண்டு.
அதெப்படி
உன்னால் மட்டும்?
நிஜம் ஓன்று
அதை மறைக்கும்
திரைகள் நூறு
அதெப்படி
உன்னால் மட்டும்?
இதயம் ஓன்று
அதனுள்
மறைந்திருக்கும்
மர்மங்கள் ஆயிரம்
அதெப்படி
உன்னால் மட்டும்?
உணர்வு ஓன்று
அதில்
ஒளிந்திருக்கும்
கனவுகள் லட்சம்
அதெப்படி
உன்னால் மட்டும்?
காதல் ஓன்று
அது செய்யும்
மாயங்கள் கோடி
காயங்களோ
கோடானு கோடி
பொங்கியது
கவிதைகள்
போதைக் கவிதைகள்
அதெப்படி
உன்னால் மட்டும்?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |