google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சுடுகாடு எங்கே இருக்கு சொல்லுங்கடா?

Sunday, September 16, 2012

சுடுகாடு எங்கே இருக்கு சொல்லுங்கடா?





சுடுகாடு எங்கே இருக்கு சொல்லுங்கடா?-இந்த
சோம்பேறிக் கூட்டத்தை கொண்டு புதையுங்கடா!
நாட்டைக் கெடுக்கும் நயவஞ்சக கூட்டமடா-இதை
நாளும் வளரவிட்டால் நாடு கெட்டுப்போகுமடா
சுடுகாடு எங்கே இருக்கு சொல்லுங்கடா?-இந்த
சோம்பேறிக் கூட்டத்தை கொண்டு புதையுங்கடா!

மதவெறி கொண்டு அலையும் கூட்டமடா-இது
மனிதாபிமானத்தை தின்று பல்லைக்காட்டுதடா
கட்டுக் கதைகளை சொல்லி ஏமாற்றுதடா-இது
நாட்டு முன்னேற்றத்தை முடக்கிப் போடுதடா
சுடுகாடு எங்கே இருக்கு சொல்லுங்கடா?-இந்த
சோம்பேறிக் கூட்டத்தை கொண்டு புதையுங்கடா!

பொய் பித்தலாட்டம் பேசித்தான் அலையுதடா-இந்த
வாய் சவுடாலுக்கு பேர் இங்கு என்னவாமடா?
நாளும் விலை ஏற்றி மகிழுதடா கேட்டால்-இங்கு  
நாட்டு வருமானம் போதவில்லையென புளுகுதடா
சுடுகாடு எங்கே இருக்கு சொல்லுங்கடா?-இந்த
சோம்பேறிக் கூட்டத்தை கொண்டு புதையுங்கடா!

மின்சார அடுப்பில் தீயெரிய மாட்டேங்குதடா-அந்த
சமையல் கேஸை நினைத்து வயிறு எரியுதடா
வதந்தீ மட்டும் என்றும் பற்றி எரியுதடா-இந்த
கொடும்தீ பரப்பி அலையுது ஒரு கூட்டமடா 
சுடுகாடு எங்கே இருக்கு சொல்லுங்கடா?-இந்த
சோம்பேறிக் கூட்டத்தை கொண்டு புதையுங்கடா!
  
போராடி நாட்டை தந்ததொரு கூட்டமடா -அதை
வேரோடு அழிக்க வந்தது ஊழல் கூட்டமடா
சட்டமும் இங்கே பட்டமாய் பறக்குதடா –அது
சதிகாரர் கையில் போய் விளையாடுதடா
சுடுகாடு எங்கே இருக்கு சொல்லுங்கடா?-இந்த
சோம்பேறிக் கூட்டத்தை கொண்டு புதையுங்கடா! 
***********************************************


Thanks-YouTube-Uploaded by balajprasanna on Dec 25, 2011



ThanksSoundcloud -Anger by momoypseudo
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1