google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வசந்தகுமாரின் வெற்றிப்படிக்கட்டு-2

Friday, September 07, 2012

வசந்தகுமாரின் வெற்றிப்படிக்கட்டு-2



எளிமையான
அர்த்தமுள்ள
அருமையான
வார்த்தைகளில்
வெற்றிப்படிக்கட்டு
துவங்குகிறது

அதன் அடித்தளம்
ஆழமானது அசையாது

வாழ்க்கையில் வரும்
நிலநடுக்கம்
சுனாமிகளுக்கும்
என்றும் ஈடு கொடுக்கும்

வெடிக்கும் விபத்துகளும்
அடிக்கும் சூறாவளியும்
அதனிடம் ஓன்றும் செய்யாது

வசந்தகுமாரின்
வெற்றிப்படிக்கட்டு
வாழ்வியல் நெறிகள் 
நெஞ்சகம் கொண்டோருக்கு
வஞ்சகம் செய்யாது 

வாரியார் வந்து
மீண்டும் பிறந்ததுபோல்
அறிவுரைகள் அத்தனையும்
அமுதமாக உள்ளது

இராமாயணம்,
மகாபாரதம்
புராணங்கள்
படித்து கேட்டு உணர்ந்த
துணுக்கு நிகழ்வுகள்
நுணுக்கமாக
கோர்க்கப்பட்டுள்ளன

ஆரம்ப படிக்கட்டு
விநாயகரின் வெற்றிக்கனி
ஞானப்பழம் கதையில்....
புத்தி கூர்மையே
உடல் உழைப்பைவிட
உயர்ந்ததாக....

மனஉறுதியும் வைராக்கியமும்
இரண்டாவது படிக்கட்டு
வைராக்கியம் வைரமாய் மாறும்
மகாபாரதத்தில்
துரோணாச்சாரியாரின்
வைராக்கியமும் வெற்றியும்

இப்படியே
பகுதி ஓன்று
அய்ம்பது படிக்கட்டுகள்
அவைகளை படித்து
முன்னேற்றத்தின்
தடைகற்க்களை
முடிந்தவரை தவிர்க்கலாம் 




Thanks-SoundCloud-by prakash L
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1