நீண்ட வருடங்களாக
நெஞ்சை வருடிக்கொண்டிருக்கும்
நினைவலைகளில் ஓன்று
அப்போது வயது எனக்கு
பதினொன்று இருக்கும்
அன்று வடுகபட்டி ஊரே
அணிதிரண்டு சென்றது
அருகில் உள்ள
வைகை அணைக்கட்டுக்கு
அன்று மக்கள் மனதில்
மகுடம் சூடியிருந்த
மாபெரும் நடிகரின்
திரைப்படம் பிடித்தல்.
அடம்பிடித்தேன் நானும்
அழைத்துச் சென்றார் அப்பாவும்
ஆண்டிபட்டியும்
அதன் அருகில் உள்ள
சுற்று வட்டார ஊர்களும்
வைகை அனைக்கட்டில்தான்
விடிந்தது முதல் காத்திருந்தது
படம் பிடித்தலை
பார்ப்பதைவிட
நடிகரை பார்க்கவே
அலை கடலென கூட்டம்
அவர் ஓய்வெடுக்கும்
கண்ணாடி மாளிகை சுற்றி
திரைப்பட பாட்டுக்கு
படம் பிடிக்குமிடத்திலும்
திரண்டிருந்த கூட்டமோ
அளவிட முடியாதது
காவலர்கள் கட்டுப்பாடும்
கடுமையானது.
இயற்கையும் செயற்கையும்
இணைந்தே இருந்தன
குரோட்டன்ஸ் செடிகளில்
காகித ரோசாக்கள் மலர்ந்தன
தூங்கு மூஞ்சி மரங்களில்
தொங்கின மல்லிகைகள்
காத்திருந்தனர் கதாநாயகிகள்
வண்ணக் குடைகள் கீழ்
கண்ணங்களை ஒத்தி ஒத்தி
அழகு படுத்திக்கொண்டு
படம் பிடிக்கும் கருவிகள்
கருப்பு துணி போர்த்திக்கொண்டு
திடீரென்று கூட்டத்தில்
தள்ளு முள்ளு
வந்து இறங்கினார்
கோட்டும் சூட்டும் போட்ட
மாட்டுக்கார வேலன்
கதாநாயக நடிகர்
அலப்பரித்த கூட்டத்துக்கு
கை அசைப்பு காட்டிவிட்டு...
அவரும் நடிக்க துவங்கினார்
திரைப் பாடலின்
ஒரு வரிதான் ஓடும்
ஒலிநாடாவில்....
ஓடி வருவார் நடிகர்
இப்படியே
ஓடும் ஓடிவருவார்
ஓடும் ஓடிவருவார்
ஒன்பது முறைக்கு மேல்
ஓடியிருக்கும் பாடியிருக்கும்
குப்பென்று சிரித்தது கூட்டம்
கோபம கொண்டது
திரைப்பட குழுவினர் கூட்டம்
விழுந்தது காவலர் தாக்கம்
ஓட்டம் எடுத்தது கூட்டம்
பார்த்ததும் பட்டதும்
போதுமென்று
அப்பாவும் நானும்
வீடு திரும்பினோம்
மந்தையிலிருந்து....
****************************
காணொளி-பூவைக்க பூவைக்க....
Thanks-YouTube-Published on May 3, 2012 by MultiAbdulgafoor
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |