வால்மார்ட்-
பணத்தை மிச்சப்படுத்து,
பவுசாக வாழு!
(செலவு செய்தால்
சொகுசாக வாழ்வது எப்படி?)
இதுதான்
வால்மார்ட்டின்
தாரக மந்திரம்
(என்ன மந்திரமோ?
என்ன தந்திரமோ?)
வாடிக்கையாளர்களுக்கும்
உறுப்பினர்களுக்கும்
எதை விரும்புகிறார்களோ
அதை வழங்குவதே
அதன் சேவையாம்
Thanks-YouTube-Uploaded by jaykermit4life
வாரத்திற்கு இருநூறு கோடி
வாடிக்கையாளர் சேவைகள்
மின்னணு பொருட்கள்
வேடிக்கைப்பொருட்கள்
அழகுசாதன பொருட்கள்
மளிகை பொருட்கள்
..............................................
..................................................
அனைத்தும் ஒரே இடத்தில்
குழந்தைகள் பெரியவர்கள்
அனைவருக்கும் ஒரே இடத்தில்
அங்கும் இங்கும்
அலைய வேண்டியதில்லை
வீடுதேடியும் வந்து சேரும்
அது சரி....
அன்று ஆங்கிலேயரின்
கிழக்கிந்திய கம்பெனி
இந்தியாவை அடிமையாக்க
ஆரம்பமே அதுதானே..?
கோக்கும் பெப்சியும் வந்து
காளிமார்க்கும் பவன்டோவும்
காணாமல் போகவில்லையா?
ஆனால்
இன்று இந்தியர்கள்
ஏமாளிகள் அல்ல
ஏய்க்க நினைத்தவர்கள்
ஏமாந்த கதை-
சில காலங்களுக்கு முன்
கடன் அட்டைகள் தந்து
காணாமல் போனவர்கள்
சில்லறை வர்த்தகத்தில்
அந்நிய முதலீடு இந்தியாவில்
ஆகப்போகும் கதை?
வடிவேலு பெண் பார்த்த
மாயி திரைப்படத்தின்
வாம்மா....மின்னல் போல்தான்....
"நம்ம வால்மார்ட் வந்திருக்காக
மற்றும் நம்உறவினர்களும்
வந்திருக்காக....வாங்க வாங்க
வாடிக்கையாளர்களே!"
"நம்ம வால்மார்ட் வந்திருக்காக
மற்றும் நம்உறவினர்களும்
வந்திருக்காக....வாங்க வாங்க
வாடிக்கையாளர்களே!"
Thanks-YouTube-Uploaded by lovingsathish
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |