google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அரசவைப் பாடகியின் விம்மல்!

Sunday, October 28, 2012

அரசவைப் பாடகியின் விம்மல்!


அரசியைப் பாட்டுப் பாடி
அன்றாடம் தூங்க வைப்பதே
அவளின் வேலை
அவள்தான் அரசவைப் பாடகி  

அன்றிரவு அரசியை தூங்க வைக்க
பாடியவள்...விம்மி விம்மி அழுதாள்.
அரசிக்கு வந்த தூக்கம் துயரமானது

“அரசவைப்பாடகியே!
ஏன் அழுகிறாய்?
உன் தும்மலுக்கு..ச்ச
விம்மலுக்குக் காரணம் என்ன?
என்று வினாவினாள் அரசி.

அரசவைப் பாடாகி
அழுது வடிந்தால்....
தூக்கம் போய்விடுமே
என்று நினைத்த அரசி 
விடிந்ததும் ஆணையிட்டாள்
காவலற்படைத் தளபதிக்கு

அரசவைப்பாடகியின்
அழுகைக்குக் காரணமானவர்களை
கைது செய்து சிறையிலடைத்து
சித்ரவதை செய்யுங்கள் என்று.

அடுத்த நிமிடமே

இரண்டு பேரைப் பிடித்து
சிறையில் அடைத்தார்கள்
அரசியின் ஆணைக்கு இணங்க
காவற்படை காவலர்கள்
இன்னும் நான்கு பேரை
வலைவீசி தேடினார்கள்

மக்களுக்கோ
என்ன காரணம்...?
என்று தெரியவில்லை.
தெரிந்தவர்களும்
அரசியும் அரசவைப் பாடகியும்
ஒரே இனம் என்பதால்
அப்படியே அடங்கிப்போனார்கள்.

அந்த ரகசியம் என்னவென்று
அரசல் புரசலாக
நாட்டில் உலாவியது....

அன்றொரு நாள்
அரசவைப் பாடகி
கோயில் கச்சேரியில்
அஞ்சு கட்டையில் பாட

அந்த ஆறு பேரும்
அடக்க முடியாமல்
கொட்டாவியோ...?
கெட்ட ஆவியோ...?
விட்டு விட்டார்களாம்

அந்த நாற்றத்தால்  
அரசவைப் பாடகியின்
தொண்டை கட்டிக்கொண்டு
தமிழில் பாடுவது
தமிங்கலத்தில்
பாடுவது போல் ஆனதாம்.       

அய்யயோ....
இனிமே யாராவது பாடுனா...
வாயையும் ஆ...வாயையும் 
பொத்திகனுமப்பா?  
*******************************************


     

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1