google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கடவு(ள்) சொல்

Friday, October 19, 2012

கடவு(ள்) சொல்




அன்பு
அன்னை ஊட்டிய    
கடவு(ள்) சொல்

தன்னம்பிக்கை
தந்தை தந்த  
கடவு(ள்) சொல்

அறிவு
ஆசான் காட்டிய
கடவு(ள்) சொல்

அழகு
இயற்கை அளித்த  
கடவு(ள்) சொல்

அறியாமை
மதவாதிகள் பேசும்   
கடவு(ள்) சொல்

லஞ்சம்
அதிகாரிகள் கேட்க்கும்   
கடவு(ள்) சொல்

ஊழல்
அரசியல்வாதிகளின்  
கடவு(ள்) சொல்

கனவு
மக்கள் காணும்   
கடவு(ள்) சொல்

கடவு சொல்
அடைந்து கிடக்கும்
பொக்கிசங்களின்
திறவு கோல்..

கடவு சொல்
எல்லோருக்கும்
கிடைப்பதில்லை

கிடைத்தவர்களுக்கு
கடவுள் சொல்
*******************************************
மரம் பற்றி வைரமுத்து 
*******************************************  

                  Thanks-YouTube-Uploaded by cafedeitn
  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1