google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கேள்வியும் பதிலும் கோச்சடையானே!

Tuesday, October 16, 2012

கேள்வியும் பதிலும் கோச்சடையானே!


கோச்சடையான்


கேள்வி-
ஏம்பா கோச்சடை!
உம் படத்தை பற்றி...ம்...ஏதாச்சும்...டக்கரா கீச்சுப்பா?
                        -டைட் கபாலி,டம்மிக்குப்பம்.சென்னை.
பதில்- 
நண்பர் டைட் கபாலி அவர்களே!
என் பெயர்தான் கோச்சடையான் நான் சூப்பர் ஸ்டார் இல்லை ஆனாலும் அது மிகப்பெரிய பட்ஜெட்  படம் பெரிய வெற்றி பெரும் (நண்பரே! பெரிச்ச பட்ஜிட் பயம்னா காத்தால ஆரம்பிச்சி னைட்ல உட்ருவாங்களா? என்று நீர் அனத்துவது காதில் கேட்கிறது)

 *****************************************************************************





கேள்வி-
ஏல...கொச்சடயான்...இந்த கூடங்குளத்த பத்தி என்னால சொல்ற...?
                   -ஆ....சுடலை.நடுத்தெரு,இடியாதகரை.
பதில்-
 நண்பர் நடுத்தெரு ஆ....சுடலை அவர்களே! நீங்கள் நடுத்தெருவில் நின்று போடும் கூக்குரல் உங்கள் தெருவைத்தாண்டி இப்போதுதான் கேட்க ஆரம்பித்துள்ளது அது டெல்லி வரை போய் சேருவதற்குள் அணு உலை இயங்க ஆரம்பித்தாலும் ஆச்சிரியமில்லை.

*************************************************************

கேள்வி-
கோச்சடையான் அவர்களே! டெங்கு காய்ச்சல் பரவுவதை பற்றி என்ன நினைக்கிறீர்?
                   -து.ஆரோக்கிய சாமி,(முகவரி இல்லை)
பதில்-
நண்பர் து.ஆரோக்கிய சாமி அவர்களே! காலரா ஈ,டெங்கு கொசு,மற்றும் மருத்துவ மனைகளில் எலிகள்,பூனைகள்,நாய்கள் ....இவைகள் நாடு ஆரோக்கியமாக இருப்பதின் அடையாளங்கள்.(நாடு  நாற்றமெடுக்கும் குப்பைத்தொட்டியாகிவிட்டது என்று சொல்லி நீதிமன்ற படிக்கட்டில் படுத்து உறங்க என்னால் முடியாதப்பா!)  

**************************************************************
 
கேள்வி-
அன்புள்ள நண்பர் கோச்சடையான் அவர்களே! இரண்டு நாளுக்கு முன்பு எனது பதிவை படிக்கச்சொல்லி மினஞ்சல் அனுப்பி இருந்தேன் படித்தீரா? ஹி..ஹி...எனக்கு ஹிட்ஸ் ரொம்ப கம்மியா இருக்கே...? நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை...நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை...போன மின்சாரம் தொடர்வதில்லை இறைவன் (!) ஏட்டினிலே தொடர்ந்த மின்சாரம் இருப்பதில்லை மனிதன் வீட்டினிலே..

                   -திண்டுக்கல் பொன்.தனபாலன்,திண்டுக்கல்.                       
பதில்-
பதிவர் நண்பர் திண்டுக்கல் போன தனபாலன் அவர்களே! தாங்கள் மின்னஞ்சல் கிடைத்தது அதில் தாங்கள் குறிப்பிட்டது போல்....பாதி படித்துக்கொண்டிருக்கும் போது போன மின்சாரம் இது வரை வரவில்லை....நெருப்புக் கோழி மாதிரி ஏதும் மின்சாரக் கோழி இருக்கிறதா? என்று தேடிக்கொண்டிருக்கிறேன் இருந்தால் கரண்ட் முட்டையோ?விட்டையோ?  ஏதாவது போடுமில்லையா?  
.... சோதனை மேல் சோதனை போதுமடா சாமி! மின்சாரம்தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி.
(யாரடா அது என் பாட்டுக்கு பின் பாட்டு பாடுறது...? 
திண்டுக்கல் போன தனபாலன் கோபத்தில் வருகிறார் என்று நினைக்கிறேன் இத்துடன் முடித்துக்கொள்கிறேன் இது வரை பொறுமையாக வாசித்த நண்பர்களுக்கு நன்றி...மின்சார(ஷாக்) நன்றி!....இப்படிக்கு உங்கள் நண்பன் கோ.சடையன்)  

     


                   Thanks-YouTube-Published by dinathirai


 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1