அன்று
ஒரு மருத்துவமனையில்
ஒரு குழந்தையை
எலிகடித்துக் கொன்றது
என்று சொல்லி...
படம் பிடித்து
தொலைக்காட்சியிலும்
நாளிதழிலும் காட்டுகிறார்கள்
என்று நினைத்தனவோ என்னவோ
எல்லா மருத்துவமனைகளிலும்
நாய்களும் பூனைகளும்
கூட்டம் கூடமாகக் கூடி விட்டன
அரசும் அமைச்சரும்
அல்லல்பட்டுத்தான் போனார்கள்
அவைகளை அகற்றுவதற்குள்...
இதை அறிந்த கொசுக்கள்
திட்டம் போட்டன
கூட்டமாகக் கூடி
டெங்கு காச்சல் பரப்பினால்
நாளை தொலைக்காட்சியில்
நாளிதழ்களில்
நாமும் வரலாம் என்று....
அதற்கும் ஆப்பு வைத்தார்
அமைச்சர் சுகாதாரம்
அறிவிக்கைவிட்டார் உடனே....
தேங்காயை திண்ணுங்கள்
அதன் சிரட்டையை
தூக்கி தூர எறியாதீர்கள்
(முடிந்தால் திண்ணுங்கள்
சிரட்டையுடன் தேங்காயை)
அதில்தான் அடைகாக்கிறது டெங்கு...
அப்புறம் மாணவிகளே!
குட்டை பாவாடையுடன்
குதுகளிக்காதீர்கள்
கொசு கண்டால் குதறிவிடும்....
அடடா...டா...
அமைச்சர் சுகாதாரமா?
அய்டியா சுகாதாரமா?
காதில் கேட்டது
ரிங்காரம்...சீ...கொசுகாரம்
அது கொசுக்குரலா....?
அல்லது அமைச்சர் விட்ட
கு....கூக்குரலா........?
அது தெரியவில்லை.
அடேய்....பரிதி!
எண்ணைப் பற்றியா எழுதுகிறாய்?
நான் ஈ அல்லடா
நான் ஈ-யை விட மோசமானவன்
கொசு...டெங்கு கொசு!
எந்த எந்திரன் வந்தாலும்
எண்ணை ஒன்றும் செய்யமுடியாது.
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |