google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஒரு பாடகியின் கதை!

Monday, October 29, 2012

ஒரு பாடகியின் கதை!




அவள் ஒரு சிறந்த பாடகி
அவள் பாட ஆரம்பித்தால்
கூட்டம் ஆர்பரிக்கும்
அவள் குரலுக்குத்தான்
அந்தக்கூட்டம்  என்று நினைத்தாள் 
ஆனாலோ 
கூட்டம் கூடுவது 
பாடும்போது அவள் 
அலட்டிக்கொள்ளும் 
தளுக்கு  முளுக்குக்கு என்று 
அவளுக்கு தெரியாது......

ஆனாலும் அந்தப் பாடகிக்கு
அவள் குரலில் திருப்தி இல்லை
இன்னும் இனிமையாக
இந்த உலகத்தையும்
இந்த உலக மக்களையும்
வசப்படுத்தும் வசீகரக் குரல்
வேண்டும் என்று நினைத்தாள்

இறைவனிடம் கேட்டாள்
அதற்கு  அவரோ
அவள் வரிசை வரும்போது
அவளுக்கு வயது
அறுபது ஆகிவிடும் என்றார்

அதனால் அவள் போனாள்
ஆங்கில வைத்தியரிடம்
அவர்களோ அவளுக்கு
தொண்டையில் அறுவை
செய்தால் போதும்
அறுவையில் தவறு எனில்
இருக்கும் குரலும்
இல்லாமல் போகும் என்றனர்

அதனால் அவள்
இயற்கை வைத்தியர்
இருப்பிடம் போனாள்
அவரோ சொன்னார்
ஆயிரம் குயில்களின்
பச்சை இரத்தம்
பருக வேண்டும் என்று.

அவளோ சைவபட்சினி
குயில் இரத்தம் குடிப்பது
வெளி உலகம் தெரிந்தால்
குலப்பெருமை போய்விடுமே
யாருக்கும் தெரியாமல்
வைத்தியர் வீட்டுக்கு போய்
இரவில் இரத்தம் குடித்தாள்

ஆயிரம் குயிலுக்கு
எங்கே போவார் வைத்தியர்?
அதனால் அவரோ
குயில்கள் கிடைக்காமல்
காக்கைகளைப் பிடித்து
குயில் இரத்தம் என்று
குடிக்கக் கொடுத்தார்.

இப்போதெல்லாம்
அந்தப் பாடகி
எங்கும் பாடுவதில்லை
வாயைத்திறந்தாலே
வரும் குரல் கா..கா.. 

வீட்டை விட்டும் அவள் 
வருவதில்லை வெளியே 
அவள் தேகம் மாறிவிட்டது 
அண்டங்காக்கை நிறத்துக்கு... 



Thanks-SoundCloud-
Men Laughing Sound Effect 1 by Melissa Carter
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1