google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: செல்வந்தரும் நான்கு மனைவிகளும்

Monday, October 22, 2012

செல்வந்தரும் நான்கு மனைவிகளும்



அந்தச் செல்வந்தருக்கு நான்கு மனைவிகள்
இருபது வயதாகும்போது அவருக்குத் திருமணம்
பதினாறு வயதில் முதல் மனைவி
அவருடைய முப்பதாவது வயதில்
இருபது வயதான இரண்டாவது மனைவி
அவருடைய நாற்பதாவது வயதில்
இருபது வயதான மூன்றாவது மனைவி
அவருடைய அய்ம்பதாவது வயதில்
இருபதுவயதான நான்காவது மனைவி 

நான்காவது மனைவியின் இளமையை நேசித்து  
ஆடை அணிகலன்களால் அவளைப் பூஜித்தார்

மூன்றாவது மனைவியின் அழகைப் பார்த்து  
யாருடனும் ஓடிவிடுவாளோ? பரிதவித்தார்

அவருக்கு வரும் சோதனைகளை அகற்றும்
இரண்டாவது மனைவியின் அறிவை நேசித்தார்

அவருடைய முதல் மனைவி மேல்
அவருக்கு எந்த நேசமும் இல்லை
ஆனாலும் அந்தப் பெண்மணியோ
அவர்மேல் பாசத்துடன் இருந்தாள்
அவர் சொத்துகளைப் பாதுகாத்தாள்

அறுபது வயதில் அந்த செல்வந்தர்
மரணப் படுக்கையில் விழுந்தார் 
பிழைக்கமாட்டோம் என்று...
தன் பகட்டான வாழ்வையும்
தன் நான்கு மனைவிகளையும் விட்டு
தன்னந்தனியாகப் போவதாகக் கலங்கினார்

மரணப்படுக்கையில் மனைவிகள் நால்வரையும்
அருகே அழைத்தவர்...
நான்காவது மனைவியிடம் கேட்டார்
தான் மடிந்ததும் தன்னோடு மடிந்து
தன் ஆத்ம பயணத்துக்குத் துணையாக
தன்னோடு வந்துவிடு என்று....
அதற்கு அவளோ அலட்டிப்போனாள்.
வேறு ஆளைப்பாரு என்று.  

மூன்றாவது மனைவியைப் பார்த்தார்
வேறு மணம் செய்வேன் என்று போனாள்

இரண்டாவது மனைவியிடம் கேட்டார்
கல்லறை வரைதான் வருவேன் என்றாள்

அப்போது வந்தாள் அவருடைய முதல் மனைவி
நோய்பட்டு நடக்க முடியாமல் தவழ்ந்தபடி
அவருடைய ஆத்மபயனத்தின் துணையாக
அவள் வருகிறேன் கடைசிவரை என்றாள்.

இந்தக் கதையின் நீதி என்னவென்றால்....

நான்காவது மனைவி நாம் நேசித்த உடல்
நம் மரணத்திற்குப்பின் நம்மோடோ வராது

மூன்றாவது மனைவி நாம் நேசித்த உடைமைகள் 
நம் மரணத்திற்குப்பின் நம்மோடு வராது

இரண்டாவது மனைவி நாம் நேசித்த உறவுகள்
நம் மரணத்திற்குப்பின் கல்லறை வரை வரும்

முதல் மனைவியே நாம் நேசிக்க மறந்த ஆன்மிகம்
இளம் வயதிலிருந்தே ஆண்டவனை நேசித்தால்
அவர் தருவார் அபூர்வ சக்தியை   
இறந்த பிறகு அது வரும் ஆரோக்கியமாக
நம் ஆத்ம பயணத்துக்கு அருந்துனையாக!

அன்பர்களே! நண்பர்களே!
இது காலம் காலமாக
எல்லா நாடுகளிலும் மொழிகளிலும்
மதவாதிகளால் சொல்லப்படுவதும்
மதம் சார்ந்தவர்களால் எழுதப்படுவதுமான
வாழ்க்கைக்கு ஒவ்வாத பழங்கதை
விஞ்ஞானத்தை மிஞ்சும் மெஞ்ஞானம்
கலாச்சாரத்தைச் சீரழிக்கும் பழஞானம்  

இந்த ஆண்மீக கதைகளை நம்புவோர் 
ஆண்டவனைப் போய்ப் பாருங்கள்
அவர் தருவார் இல்லை வருவார் 
நீங்கள் இறந்த பிறகு உறுதுணையாக! 

மதவாதிகளின் மந்திரத்துக்கும் தந்திரத்துக்கும்
மதி மயங்கி நில்லுங்கள்
அவர்கள் காட்டுவார்கள் வழித்தடங்கள்
நீங்கள் இறந்த பிறகு ஆத்மபயணம் போக...

இல்லையேல்
பகுத்தறிவுடன் சிந்தியுங்கள் உழையுங்கள்
இருக்கும் போதே வாழுங்கள் வளமாக!  

                Thanks-YouTube-Uploaded by prassanasrinivasan
 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1