உலகில் பகுத்தறிவாளர்கள்
நிறையபேர் இருந்தனர்
சிறந்த பகுத்தறிவாளர்
சிறந்த சிந்தனையாளர்
என்று சொல்ல இருந்தவர்
களம் கண்டு வாகை சூடியவர்
தந்தை பெரியார் ஒருவரே!
இந்த உலகில்
நாம் உணர்வுப்பூர்வமாக
அனுபவிக்கின்றவைகள்
நாம் அறிவுப்பூர்வமாக
சிந்திக்கும்போது
அவைகளில் உண்மை குறைவு
என்ற பிளேட்டோ முதல் பகுத்தறிவாதி.
தத்துவ ஞானி வரிசையில்
புத்தகத்துக்குள் புதைந்துபோகிறார்
தந்தை பெரியார் போன்று
களம் கண்டு வாகை சூடியவர் அல்ல
சிந்திப்பதால்
நான் இருக்கிறேன்
என்று வருகிறார் டெஸ்கார்டெஸ்
இன்னும் இருக்கிறார்கள்
ஸ்பினோஸா மற்றும் லெப்னிஸ்
பகுத்தறிவாளர்கள் வரிசையில் நிறையபேர்
இல்லாத கடவுளை இருப்பதாகச் சொல்லி
ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லி
தத்துவத்தோடு நின்றுவிட்டார்கள்
புத்தகத்தோடு போய்விட்டார்கள்
சிந்தித்ததோடு முடிந்துவிட்டார்கள்
அவர்கள் அத்தனைபேரும்
தந்தை பெரியார் போன்று
களம் கண்டு வாகை சூடியவர்கள் அல்ல
உலகில் பகுத்தறிவாளர்கள்
நிறையபேர் இருந்தனர்
சிறந்த பகுத்தறிவாளர்
சிறந்த சிந்தனையாளர்
என்று சொல்ல இருந்தவர்
களம் கண்டு வாகை சூடியவர்
தந்தை பெரியார் ஒருவரே!
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |