***காதல் எச்சரிக்கை!-4***
அந்த பெரிய வீட்டின் வாசலில் நின்று
கைகளில் மணல் அள்ளிப்போட்டால்
வார்த்தைகளால் அவள்
சாக்கடை அள்ளி தெளித்தால்...
ஆவேசத்தில் உச்சியில் அலறினாள்
வயிற்றில் கரு சுமப்பதாக கத்தினாள்
அந்த பெரிய மனிதரைப்பார்த்து....
ஊர் பார்த்தது வேடிக்கை
அந்த பணக்கார பெரியமனிதரிடம்
அவள் கள்ளக் காதல்தான்
ஊர் அறிந்த வாடிக்கை
இதிலே இன்று என்ன வந்தது?
எதுவும் புரியாமல் விழித்தது.
அப்புறம்தான் தெரிந்தது
கரு சுமப்பது
அவள் அல்ல
அவள் மகள் என்று
கரு கொடுத்தது
அவர் அல்ல
அவர் மகன் என்று.
அவளுக்கு வயது
நாற்பதுக்கு மேல்
கம்பீரமான புருஷன்
அழகான மகள்
மகளுக்கு வயது
இருபதுக்கு மேல்
ஆனாலோ
அந்த பெரிய மனிதரின்
காமப்பார்வைக்கு மடி விரித்தால்
கணவன் இருக்கும்போதே
கணவருக்கு தெரியாமல் மதிமயங்கி
இன்று அழுகிறாள் கதிகலங்கி
இருவர் வீடும் அடுத்து அடுத்து
இது அவர்கள் கள்ளத்தொடர்புக்கு
இடையூறின்றி கை கொடுத்தது.
அவள் கணவர் இல்லாத நேரம்
அவள் மடியில் அந்த பெரியமனிதர்
அசிங்கம் அதிலே உறவுமுறை
அவள் கணவரும் அந்த பெரிய மனிதரும்
நெருங்கிய பங்காளிகள்
அவளின் முறையற்ற கள்ளக்காதல்
அப்பெரிய மனிதரின் மகன் மேல்
பாசம் வைத்து நேசம் கொண்டது
வீட்டுக்குள் நுழைந்த பூனை
வேஷம் போட்டது
அந்த பெரியமனிதரின் மகனோ
அவள் மகள் மீது மோகம் கொண்டான்
அண்ணன் தங்கை உறவு முறை
அல்லல் பட்டது அழிந்து போனது
காதல் பறவை சிறகடித்தது
அவமானத்தில் அவள் புருசன்
உயிர் தூக்கில் தொங்கியது
அந்த பெரிய மனிதரோ
அவர் மகனையும்
அவள் மகளையும்
நகர்புறத்தில் குடியமர்த்தினார்
கள்ளக் காதல் காட்டிய
வலியோ? வழியோ?
அவளும் பைத்தியமாக புலம்பினாள்
இப்படியும் இருக்கும் இதன் பெயர்
காதலா? காமமா?
இதுதான் காதல் என்றால்...
காதல் எச்சரிக்கை!
பாலியல் காதல்
வாழ்வை
பாழடித்து விடும்
காதல் எச்சரிக்கை!
காதலர்களே!
பாலியல்
காதல் ஜாக்கிரதை!
(தொடரும்)
Thanks-SoundCloud-Pushpak - Sad end by sam4grafix
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |