---தந்தை பெரியார் ஒருவரே!-3----
ஒரு மனிதன்
பகுத்தறிவு சிந்தனைகளை
விரும்புவதன் மூலமே
நாத்திகவாதி அல்ல!
என்றுரைத்தான்
மாவீரன் நெப்போலியன்
ஆயிரத்தில் ஒருவருக்குகூட
நாத்திகவாதியாக இருப்பதற்கு
மனவலிமையோ
இதய திண்மையா இல்லை!
என்றுரைத்தார் கோல்ரிட்ஜின்
ஆனால்
கோடி மக்களில் ஒருவராக
கொண்ட கொள்கையை
செயல் படுத்தும் மாவீரராக
தள்ளாத வயதிலும்
தளராது வாழ்ந்தார்
தாழ்த்தப்பட்டோருக்காக
ஒடுக்கப்பட்டோருக்காக
ஓயாமல் உழைத்தார்
யாருக்கும் அஞ்சாமல்
பாருக்கு நன்மை செய்த
பகுத்தறிவு மாவீரர்
தந்தை பெரியார்!
அவரின் வீரத்தை சொல்லும்
வைக்கம் போராட்டம் ஒன்றே!
உலகில் பகுத்தறிவாளர்கள்
நிறையபேர் இருந்தனர்
சிறந்த பகுத்தறிவாளர்
சிறந்த சிந்தனையாளர்
என்று சொல்ல இருந்தவர்
களம் கண்டு வாகை சூடியவர்
தந்தை பெரியார் ஒருவரே!
(தொடரும்)
பெரியாரின் வாழ்வும் போராட்டங்களும் - தமிழருவி மணியன் உரை (பாகம்2)
Thanks-SoundCloud- by Thiru Yo
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |