google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பெற்றோரை புதைத்த காதல்!

Wednesday, October 03, 2012

பெற்றோரை புதைத்த காதல்!


கள்ளக் காதல்
     
       -----காதல் எச்சரிக்கை-5-------

அன்று
அவளுக்கு முதல் இரவு
அவனுக்கு.....?
அவளுடன் முதல் இரவு

அவனோ
பல மங்கைகளுடன்
பல இரவுகள் பார்த்தவன்
பருவ இன்பத்தை
பல முறைகள் பருகியவன்
இன்னொரு பெண்ணுடனும் 
மனைவியாக வாழ்ந்தவன்
இல்லற விவாகரத்து
இல்லாமலே பிரிந்தவன்.
முதல் மனைவியால்
அடித்து விரட்டப்பட்டவன்  
 
அன்றிரவு அனுபவித்த
முதல் இரவின் முழு இன்பமும்
அவள் முகத்தில் தெரிந்தது

விடிந்த பிறகே தெரிந்தது 
அவளுக்கு முதல் இரவு 
அவள் தாய்க்கு கடைசி இரவு  

அடைக்கலம் கொடுத்து
ரகசிய பதிவு மணம் செய்வித்த
அவள் காதலனின் நண்பர்கள்...?

சோகச்செய்தி
சொல்லி நின்றார்கள்

அவள் தாயார்
அன்றிரவு தூக்கில் தொங்கி
இறந்த செய்தியை....

ஆனால் அவளோ
துடித்துப்போகவில்லை
துவண்டுப்போகவில்லை
அவளுக்கு அது
முன்பே தெரியும் என்பது போல்.

தூக்கில் தொங்கிய
தாயின் கையில் இருந்த
கடிதத்தை படித்தவர்கள்
கலங்கிப்போனார்கள்....   

என் மரணத்துக்கு
என் மகளே காரணம்
எவ்வளவோ தடுத்த பின்பும்
எவன் கூடவோ ஓடிவிட்டாள்
என் வளர்ப்பு சரியில்லை
எவர் முகத்தில் இனி விழிப்பேன்?
என் வாழ்வு முடியட்டும்.

இவைதான் இருந்தது
அந்த கடிதத்தில்...

கொலையா? தற்கொலையா?
காவலர் விசாரணை
தற்கொலையை உறுதி செய்ய
பிரேத பரிசோதனை

தாயாரின் அடக்கமும் முடிந்தது
அதற்கும் அவள் வரவில்லை!

ஆனாலும்
அவள் தந்தை மனம்
தவியாய் தவித்தது
தன் மகளை யாரோ?
ஏமாற்றி கடத்தி விட்டதாக
துடியாய் துடித்தது...

தீவிரமாக தேடினார்  
காவலர்கள் துணையுடன்
அவள் காதலன் நான்பர்களிடம்

ஏழு நாள் கழித்து
அவர்களே சரணடைந்தார்கள்
காவல் நிலையத்தில்

அவள் வயதுக்கு வந்தவளாம்
அவள் சுய நினைவுடன்தான்  
அவர்கள் திருமணமாம்
கண்ணீர் சிந்தும் தந்தையை
கண்டும் காணாததுபோல்
காதலனுடன் போய்விட்டாள் 

அவர் கடைசியாக சொன்னது...

அப்பா! மன்னித்துக்கொள்ளுங்கள்!
என்று அழுவாள் மகள் 
அழைத்துச் செல்லலாம் வீட்டுக்கு 
என்று நினைத்தேன் என்பதுதான்   

அன்றிரவே அவள் தந்தையும்
விஷமருந்தி போய்விட்டார்
இவ்வுலகை விட்டு...
இன்னும் இரண்டு சிறுமிகளை
அனாதைகளாக தவிக்க விட்டு.

அவர் மறைவுக்கும்
அவள் வரவில்லை

அவள் செய்த காதல் ஓன்று!
அது செய்த கொலைகள் இரண்டு!     
தற்கொலையோ? கொலையோ?

பெற்றோர்களின் கல்லறையில்தான்
பிள்ளைகளின் காதல் பூக்கவேண்டுமா?
இன்று நீங்கள் காதலர்கள்..காதலர்களே!
நாளை நீங்களும் பெற்றோர்களே!

மதி மயங்கிப்போனது
அவளின் குற்றமா?
மதி மயங்கச் செய்தது
அவனின் குற்றமா?
இதுதான் காதல் என்றால்.....


காதல் எச்சரிக்கை!
பாலியல் காதல்
வாழ்வை
பாழடித்து விடும்

காதல் எச்சரிக்கை!
காதலர்களே!
பாலியல்
காதல் ஜாக்கிரதை!

                        (தொடரும்)
*************************************
                      Thanks-YouTube-Uploaded by RajsMed

Thanks-SoundCloud- kadhal endral (idhuvari sad version) by prakash L
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1