google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: உறுதி கொண்ட நெஞ்சினாய்…

Sunday, November 04, 2012

உறுதி கொண்ட நெஞ்சினாய்…



நியுயார்க் நகரின்
புகழ்பெற்ற மேடிசன் கார்டன் சதுக்கம்
பிப்ரவரி 1934-ல் ஒரு நாள்
மக்கள் ஆரவாரத்தில் அதிர்ந்தது
ஒரு மைல் கல் தூரத்தை
நான்கு நிமிடம் எட்டு நொடிகளில்
இளைஞன் ஒருவன் ஓடிக் கடந்தது
உலகின் மிக வேகமான
உள்ளரங்க ஓட்டத்தின் உலகப் பதிவு.. 

இவன் பிழைக்க மாட்டான்
பிழைத்தாலும் நடக்க மாட்டான்
பிணமாகத்தான் கிடப்பான் படுக்கையில்...

அன்று மருத்துவர்களால்
தீர்மானிக்கப்பட்டவனே
இன்று ஓட்டத்தில்
உலகப்பதிவு செய்தவன்  

கிளென் கன்னிங்காம்-

அந்த எட்டு வயது சிறுவன்
பள்ளியில் ஒரு தீ விபத்தில்
இடுப்புக்குக் கீழ் பாதி உடம்பு
படு மோசமாகப் பாதிக்கப்பட்டான்
இரண்டு கால்களும் உணர்வற்ற நிலை
இரண்டு ஆண்டுகள் படுக்கை நிலை
அதற்குப்பிறகு சக்கர வண்டியில்
வீட்டை சுற்றி வலம்...

அன்றொருநாள்
அவனுக்குள்ளிருந்த திடம்  
புல்தரையில் ஊர்ந்து
வேலி சுவற்றைப் பற்றி
அவனை எழுந்து நிற்கச் செய்தது  

யார் உதவியும் இன்றி
தினம் தோறும் இதுவே பயிற்சி..

அவன் மனத்திடம்
அவனை நடக்க வைத்தது
அவனை ஓட வைத்தது
அவனை வாழ்க்கையில்
வெற்றி பெற வைத்தது.

பிரபல தடகள வீரராக
1933-ல் சல்லிவன் விருது   

1936 பெர்லின் ஒலிம்பிக்கில்
வென்றது வெள்ளிப்பதக்கம். 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1