google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நீங்கள் அத்தனை பேரும் பிரபலங்களா?

Monday, November 05, 2012

நீங்கள் அத்தனை பேரும் பிரபலங்களா?





(எனது பதிவு பிரபலங்களும் அவலங்களும் என்பதில் சமுதாயத்தில் யார் பிரபலமானவர்கள் என்று நடக்கும் சண்டைகளும் சச்சரவுகளும் பற்றி எழுதினேன்
அதில் காட்டுக்குள் குரங்குகளுக்குள் நடக்கும் சண்டை போல் உவமை படுத்தி இருந்தேன் அதற்குச் சில நண்பர்கள் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்தார்கள்.அவர்களுக்குப் பதில் சொல்வதுபோல் மீண்டும் ஒரு பதிவு பிரபலங்களின் ஆத்திரமும் மூத்திரமும் என்று (பதிவின் தலைப்பே படித்ததுமே மூக்கை பொத்திக்கொள்ளும் படி இருக்கிறதா...?) இன்றைய பிரபலமானவர்கள் ஆத்திரத்தில் பேசும் வார்த்தைகள் செய்யும் செயல்கள் சமுதாயத்தை நாற்றமெடுக்க செய்வதாகச் சொல்லியிருந்தேன்.
உங்கள் படைப்பு - பிரபலங்களின் ஆத்திரமும் மூத்திரமும்- இல் , எழுத்து நண்பர் KS.Kalai ஒரு கருத்து பதிந்துள்ளார்.
கருத்து: சார்... தங்களின் படைப்பில் உள்ள சூடு புரிகிறது ஆனால் இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லி இருக்கலாமோ என்று எண்ணுகிறேன். அறிவுரை கூற வந்த விடயம் தெளிவாக இருந்தால் நன்று என்று நினைப்பதால் தான் கேட்கிறேன். சொல்வீர்களா?


நண்பர் கலையின் கேள்விக்கான பதிலே இப்பதிவே........

நண்பர்களே! இந்தப் பதிவு முடிந்தவரை விளக்கம் தரும் என்று நினைக்கிறேன்)  

சமுதாயத்தில் அன்றும் இன்றும் என்றும் எல்லோரும் சமாமானவர்களே அதில் செயற்கரிய செயல்கள் மற்றவர்களை விடச் சிறப்பாகச் செய்பவர்கள் பிரபலமாகிரார்கள் அரசியல்,திரைப்படம்,கலை,இலக்கியம்,ஓவியம்,இப்படி அவர்கள்  எல்லா வித துறைகளிலும் இருக்கிறார்கள்.அவர்களில் மக்களுக்கும் சமுதாயத்துக்கும் சுயநலமற்றுச் சிறப்புச் செய்பவர்கள் சான்றோர்களாக மதிக்கப்படுகிறார்கள் போற்றப்படுகிறார்கள்.அவர்களில் மறைந்தவர்களும் இருக்கிறார்கள் இன்று இருப்பவர்களும் இருக்கிறார்கள்.அவர்கள் யாரையும் நான் இங்குக் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அவசியமில்லை.


இன்று எல்லோரும் எளிதில் பிரபலமானவர்களாகி விடுகிறார்கள். ஆனால்,அதை தக்க வைத்துக்கொள்வதில்தான் போட்டிகளும் பொறாமைகளும்.அதற்காக அவர்கள் செய்யும் செயல்களே அவர்களைச் சிறுமை படுத்துகிறது.


பிரபலமானவர்களுக்கு என்று சில தகுதிகள் இருக்கிறது. அவைகள் காலங்காலமாக மேலை நாட்டு இலக்கியங்களிலும் நம்ம நாட்டு இலக்கியங்களிலும் நிறைய சொல்லப்பட்டுள்ளன


யார் ஒருவர் தன் நல் இதயத்தின் உந்துவிசைக்குச் செயல்படுகிறார்களோ...

யார் ஒருவர் மனசாட்சிக்கு பயந்து நடக்கிறார்களோ.....
யார் ஒருவர்  சுயநலமின்றி அடுத்தவரின் உணர்வுகளை மதிக்கிறார்களோ...
யார் ஒருவர்  தன்மீது அடுத்தவர்களுக்கு ஏற்பட்ட மரியாதையைத் தக்கவைக்கிறார்களோ...
யார் ஒருவர்  தன்மீது அடுத்தவர் காட்டும் பாரபட்சங்களையும் ஆத்திரப்படாமல் மன்னிக்கும் மனப்பாங்கு கொண்டிருக்கிறார்களோ
யார் ஒருவர் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு அமைதிகொள்கிறார்களோ....
யார் ஒருவர் கர்வம்,தற்பெருமை,ஆணவம்,காவிதம்,வாய்மதம்,சாட்டம்,சிலாக்கியம் இல்லாதவர்களாக இருக்கிறார்களோ...
யார் ஒருவர் உத்தண்டமாய்ப் பேசாமல் கண்ணியமாய் இருக்கிறார்களோ...
யார் ஒருவர் நல்ல விசயங்களைப் போற்றியும் அதேநேரம் அற்ப விசயங்களைத் தூற்றாமலும் இருக்கிறார்களோ....  
யார் ஒருவர் தன்னைவிட உயர்ந்தவர்களுக்குக் கபடமற்ற மரியாதை செய்பவராகவும்,  தனக்கு சமமானவர்களுக்கு அன்பாதரவான இனியவர்களாகவும்,தனக்குச் கீழானவர்களுக்குத் தயாள உணர்வு உள்ளவர்களாகவும் இருக்கிறார்களோ....
யார் ஒருவர் எல்லா இடங்களிலும் கருணை,எளிமை,நேர்த்தி நிறைந்தவர்களாக இருக்கிறார்களோ...
யார் ஒருவர் மன உறுதி கொண்டவர்களாக இருக்கிறார்களோ.....
யார் ஒருவர் கட்டளையிடுவதிலும் உதவி கேட்பதிலும் மென்மையான தன்மை கொண்டு இருக்கிறார்களோ.....

இப்படியே நிறையச் சொல்லலாம்.......

தமக்காக வாழாமல் பிறருக்காக வாழ்பவர்கள். பொது நலமும்
கொண்டவர்கள். இத்தகைய இயல்பு யாரிடம் அமையும் என்றால்
சான்றாண்மை உடையாரிடம் அமையும் என்கிறார் வள்ளுவர்.

அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் ; அன்பு உடையார்,


என்பும் உரியர், பிறர்க்கு
(குறள்:72)

   

அன்பு உள்ளம் கொண்டவர்கள் சான்றோர்கள், அவர்கள் பொது
நலம் கருதி எதையும் பிறருக்கு வழங்கும் பண்பு உடையவர்கள்.
தமது உடலின் பாதுகாப்பைக்கூடப் பொருள்படுத்த மாட்டார்கள்
என்று சான்றோர்களின் சான்றாண்மை இயல்புகளைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.


இப்படியே நம் தமிழ் சான்றோர்கள் நிறையபேர் நிறையச் சொல்லிச் சென்றுள்ளார்கள்.

இவைகளை அறிந்தமையால்தான் நான் மேற்படி பதிவுகளை எழுதினேன்.

இப்போது உங்களுக்கும் இன்றைய பிரபலமாக இருக்கும் இருப்பதாகச் சொல்லிக்கொள்பவர்களைப் பார்த்து கேட்கத்தோனும்-

நீங்கள் அத்தனை பேரும் பிரபலங்களா?.....என்று. 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1