google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மன்னரும் மக்களும்

Saturday, November 03, 2012

மன்னரும் மக்களும்



அன்றொரு நாள்
மாறு வேடத்தில்
மன்னர் வந்தார்
நகர் உலா

தெருவில் ஒரு முதியவர்
உண்ண உணவின்றி
திண்டாடுவதைப் பார்த்து...

அருகில் சென்று
அவரிடம் கேட்டார்..

“பெரியவரே!
பேணிக் காக்க உமக்கு
வாரிசுகள் இல்லையோ?

அதற்கு
அந்த முதியவரோ-

இருக்கிறார்கள் அய்யா!
ஏழு மகன்கள்
அயிந்து மகள்கள்
நான் சம்பாதித்த சொத்துக்களை
அவர்கள் பிடுங்கிக் கொண்டு
அனாதையாக என்னை
அலைய விட்டார்கள்
வயோதிக காலத்தில்
வாட விட்டார்கள்

அடுத்த நாள்
மன்னர் ஆணையிட்டார்….

இனி முதியோர்களை
அரசே ஆதரிக்கும்
மூன்று வேளை அவர்களுக்கு
உணவு அளித்துப் பராமரிக்கும் என்று
 

அடுத்த நாள்
மறுபடியும் மாறு வேடத்தில்
மன்னர் போனார் நகர் உலா

அன்று ஒருவர்தான் இருந்தார்
இன்று தெருவெங்கும்
நிறைந்துக் கிடந்தனர் முதியோர்கள்

திகைத்த மன்னர்
அவர்களிடம் கேட்டார்
அதில் ஒரு பெரியவர்
அவரிடம் சொன்னார்...

எங்கள் மன்னருக்கு
பைத்தியம் பிடித்து விட்டது




*****************************************************************************

இன்றைய முகநூல் பீரங்கி முழக்கம் .....



இளம்பிள்ளைவாதத்தால் கால்களை இழந்த மனைவி ஒரு புறம்...

நடைபழகும் குழந்தை மற்றொரு புறம் என குடும்ப பாரத்தை தோளில் சுமந்து எதிர்காலத்தை தேடி அலையும் வட மாநில வாலிபர்...

குடித்து குடும்பத்தையே அழிக்கும் பல ஆண்கள் மத்தியில் போற்றப்பட வேண்டிய மனிதர் இவர்..


Thanks-
Easwar Thanikaatturaja in my facebook


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1