google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சிரிக்கச் சில சிந்தனைகள்!

Tuesday, November 06, 2012

சிரிக்கச் சில சிந்தனைகள்!




தன மனைவி செய்யும் செலவுகளைவிட
அதிகமாகச் சம்பாதிப்பவனே
ஒரு வெற்றிகரமான மனிதன்
அப்படி ஒரு மனிதனை
கணவனாகக் கண்டுபிடிப்பவளே
ஒரு வெற்றிகரமான பெண்......லானா டர்னர்

(அதுதான் நாட்டில் நிறையக் காதல்கள்
கல்யாணம் வரை வருவதில்லையோ...?)

********************************************************************************

ஒவ்வொரு பெரிய மனிதருக்கு பின்னாலும்
ஒரு பெண்மனியின் கண் அசைவு இருக்கும்
                            .......ஜிம் கேரி  

(நாளையிலிருந்து சொல்ல வேண்டியதுதான்
முன்னாடி நின்று முறைக்கும் மனைவியிடம்
பின்னாடி நின்று கண்ணை உருட்டு என்று.)

*********************************************************************************

ஓர் அழகான பெண்ணிடம்
ஒரு மணி நேரம் கொஞ்சிப் பேசுவது
ஒரு நொடி போல்தான் தோணும்.
அதுவே குளிர் விரட்டும் அனல் அடுப்பு முன்
ஒரு நொடி இருப்பது ஒரு மணி போல் தெரியும். இதுவே சார்பியல் கோட்பாடு....ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

(அடடா..என்ன அருமையான ஆய்வியல் விளக்கம் இப்படி என் வாத்தியார் பாடம் நடத்தியிருந்தால் நானும் ஒரு விஞ்ஞானி ஆகியிருப்பேன்)

********************************************************************************

எந்தப் பெண்ணும் அழகானவளாகி விடுவாள்
அந்தப் பெண் முன் நின்று
முட்டாள்தனமாக ஓர் ஆண் விழித்தால் போதும்.             ....ஹெடி லாமார்
(அதாவது பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை
பார்த்து பார்த்து ஜொள் விடுவது போல)

***********************************************************************************

கடவுள் நம்மை நேசிக்கிறார்
நாம் மகிழ்வாக இருப்பதை விரும்புகிறார்
என்பதின் அடையாளமே....மது.
          .................பெஞ்சமின் பிராங்களின்

(அரசு மக்களை நேசிக்கிறது
மக்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறது
என்பதின் அடையாளமே டாஸ்மாக் மதுக்கடைகளோ..?)   

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1