google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: உன்னையே நம்பு!

Monday, November 05, 2012

உன்னையே நம்பு!



கடவுளிடம் கவலைகளைச் சொல்வதால்
கவலைகள் கூடாது குறையாது
கடவுள் பிரதிநிதிகளிடம் சொன்னால்
கவலைகள் கூடிவிடும். 

அடுத்தவரிடம் கவலைகளைச் சொல்வது
பாலைவனத்தில் பாத்திக் கட்டி
பயிரிடுவது போன்றது.

எத்தனை முறை மூழ்கினாலும்
எத்தனை முறை தத்தளித்தாலும்
கடைசியில் கரை சேர வேண்டுமெனில்
கடினமாய் நீந்த வேண்டும்.

அழுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்
சிரிப்பதற்கு ஒரு காரணமாவது ஒளிந்திருக்கும்
ஆயிரம் கோடி நட்சத்திரங்களில்
அதை நாம் கண்டறியவேண்டும்

தோல்விகள்தான்
நம் கவலையின் காரணகர்த்தா

தோல்விகளைத் தவிர்ப்பதுதான்
நம் கவலைகளுக்கு அருமருந்து

வாழ்ந்தவர்களின் கதை சொல்லுமே
வாழ்க்கையில் நமக்கு பல பாடங்கள்

வெற்றியாளர்களின் கதை சொல்லும்
எப்படி நாம் வாழவேண்டும் என்று

தோல்வியாளர்களின் கதை சொல்லும்
எப்படி நாம் வாழக்கூடாது என்று.

ஆனால்
எந்த வெற்றியாளர்களும்
தோல்வியைச் சந்திக்காதவர்களாக
இருக்க முடியாது.

ஹென்றி ஃபோர்டு-
அவருடைய வெற்றிகரமான மோட்டார் நிறுவனத்தை நிறுவுவதற்கு முன்
அயிந்து முறை அவரது ஆரம்ப நிறுவனங்கள் தோல்வியில் முடிந்தன.

சோய்செரோ ஹோண்டா-
டொயோட்டோ நிறுவனத்தில் வேலைகேட்டு விரட்டியடிக்கப்பட்டவரே
வீட்டிலிருந்தே சொந்த ஸ்கூட்டர்களைத் தயாரிக்கத் துவங்கி பிரபல ஹோண்டா வணிக நிறுவனம் துவங்கியவர்

அகியோ மோரிடா-  
சோனி கார்ப்பரேசன் நிறுவனர்.
அவரது முதல் தயாரிப்பு ஓர் அரிசி சமையல் குக்கர்..மிகப்பெரிய தோல்வியைத் தந்தது. இன்று மிகச் சிறப்பான பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனம் அது

வின்ஸ்டன் சர்ச்சில்-
இங்கிலாந்தின் பிரதமராக இரண்டுமுறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தனது பள்ளிப்படிப்பில் ஆறாவது வகுப்பை தாண்டுவதற்குள் தரிகிடத்தோம் போட்டவர் நோபல் பரிசு வென்றவர் நம்ப முடிகிறதா?  

                 Thanks-YouTube-Uploaded by Seablues01

******************************************************************************
இன்றைய தகவல் பீரங்கி.....

கிரீன் டீ குடிப்பது உடம்புக்கும் உள்ளத்துக்கும் நல்லது
யார் உடம்புக்கு...?
யார் குடிக்கிறார்களோ
அவர்களைப் பார்த்துக்கொண்டு இருப்பவரின் ...உடம்புக்கு.
ஹா...ஹா....நான் சிரிச்சிட்டேன். அப்ப நீங்க...?
 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1