google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விதியை வென்றவள்!

Friday, November 02, 2012

விதியை வென்றவள்!




இது
ஒரு உண்மைக்கதை!

இந்த இளம் பெண்ணின்
கதையை அறியும் போது
நம் வாழ்வில் வரும் சோதனைகள்
நமக்கு பெரிதாகத் தெரியாது.

மரிசெல் அபர்டன்-
பிலிப்பைன்ஸ் நாட்டின்
சாம்போங்கா நகரைச் சேர்ந்த
அந்த 11 வயது சிறுமிக்கு
செப்டம்பர் 25,2000-ம் ஆண்டு
நல்ல பொழுது இல்லை.  

அவளும் அவளது மாமாவும்
வீட்டிலிருந்து சிறிது தொலைவில்
தண்ணீர் மொண்டுவரச் சென்ற போது..

கொடிய ஆயுதங்களுடன்
நான்கு மனிதமிருகங்கள்
அவளது வீடருகே உள்ளவர்கள்
குடும்பப்பகை காரணமாக
அவர்களை வழி மரித்தவர்கள்
அவளது மாமாவை
வெட்டிக் கொன்றார்கள்

அவளை வெட்டும் போது
துண்டாகி விழுந்தது
மணிகட்டுக்கு கீழே
இரண்டு கைகளும்...
அப்படியும் விடாமல்
அவளது கழுத்திலும்
கொடுவாள் பாயத்தது..
மயங்கி விழுந்தாள் அவள்.

அவள் இறந்துவிட்டாள் என்று
அந்தக் கும்பல் சென்றது.
கண்விழித்த அவளோ
வலியுடன் அலறியபடி 
வீடு வந்து விழுந்தாள்
அன்னையின் மடி மீது...

தன் மகள் மீதான
பயங்கரவாதத்தின்
கொடுமையைக் கண்டு
பரிதவித்த தாய்
12-மைல் தூரத்தில் உள்ள
மருத்துவமனையில் சேர்த்தாள்.

அவள் பிழைத்துக்கொண்டாள்
மணிகட்டுக்கு கீழே
கைகள் இல்லாமல்..

விதியை நோகாமல்
வாழும் அவளுக்கு
இன்று வயது 23.
மணிக்கட்டு வரை கைகளுடன்  
மகத்துவங்கள் பல செய்கிறாள்
கணனியில் சிறந்த தேர்ச்சி

2008-ஆம் ஆண்டில்
ஹோட்டல் மற்றும்
உணவக மேலாண்மையில்
பட்டம் பெற்றவர்
தங்கப்பதக்கம் வென்றவர்

இன்று அந்தப் பெண்மணி
உலகின் தலை சிறந்த
சமையல்காரர்களில் ஒருவர்

கைகள் இல்லாத ஒரு செஃப்  

விதியை வென்றவள்!.           
Thanks-photos and story Written by Stephen on June 7th, 2012 in academictips.

                  Thanks-YouTube-Uploaded by kanashiihanashi6


  ************************************************************


 இன்றைய முகநூல் பீரங்கி....
*****************************************************************




அதிகமான ஆட்டோவில் எழுதப்பட்டுள்ளது.............

ஆனால் ஒரு மருத்துவ மனையில் கூட எழுதப்படவில்லை!!

"பிரசவத்திற்கு இலவசம்" என்று



  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1