google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ட்வீட்டர்களே! ட்வீட்டர்களே!

Friday, November 02, 2012

ட்வீட்டர்களே! ட்வீட்டர்களே!





ட்வீட்டர்களே! ட்வீட்டர்களே!

காடுகளைப் பற்றி ட்வீட்டுங்கள்
காட்டிக் கொடுக்காது உங்களை

மரங்களைப் பற்றி ட்வீட்டுங்கள்
வரம் தரும் உங்களுக்கு

மழையைப் பற்றி ட்வீட்டுங்கள்
மனம் குளிரும் உங்களுக்கு

மலைகளைப் பற்றி ட்வீட்டுங்கள்
மல்லுக் கட்டாது உங்களுடன்

எருமைகளைப் பற்றி ட்வீட்டுங்கள்
எதிர்த்து நிற்காது உங்களுடன்

வானத்தைப் பற்றி ட்வீட்டுங்கள்
வழக்குப் போடாது உங்கள் மீது

குடி குடியைக் கெடுக்கும்
குடிப் பழக்கம் உடல் நலக் கேடு
புகை பிடித்தல் புற்று நோய் வரும்
அரசியல்வாதிகளை ட்வீட்டினால்
அதைவிட இல்லை வேறு கேடு  
சினிமா பிரபலங்களை ட்வீட்டினால்
சீரழிவுச் சிறுமை நோய் வரும்   

எப்படி  இருந்த நான் 
இப்படி ஆகிட்டேன்....
டுவிட்டர்கள் எல்லோரும் இப்ப
CUTE-ட்டர்களாய் மாறிட்டாங்க

நானும் இப்போ
உஜ்ஜாலாவுக்கு மாறிட்டேன்..
அப்ப நீங்க?

இப்போதெல்லாம்
எனக்கு வரும் கீச்..கீச் 
நீலம் புயல் எச்சரிக்கை..
பாட்டி  வைத்தியம் 
பழமொழிகள் பஞ்சாங்கங்கள்

தொண்டையில் கிச்சு கிச்சா...?
விக்ஸ் சாப்பிடுங்க....

Twitter என்றால் பறவை போல் கீச்சிடு 
எந்தப் பறவை என்று தெரியவில்லை..?
ஈமு....பறவையா ....?    
இரண்டுக்கும் இப்ப 
ம்ம்ம்.... சரியில்லையா...?


                   Thanks-YouTube-Uploaded by Current





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1