google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ‘சீசர் மஸ்ட் டை’-கைதிகள் நடித்த சினிமா!

Saturday, December 15, 2012

‘சீசர் மஸ்ட் டை’-கைதிகள் நடித்த சினிமா!


     === ‘சீசர் மஸ்ட் டை’இத்தாலிய ‘கலை’ சினிமா! ===
(அன்பர்களே! வெளிநாட்டு அதிரடி திரைப்படங்கள் பற்றி எழுதிய நான் இப்பதிவில் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் ஒரு கலை படைப்பை பற்றி எழுதுகிறேன்.)

 ‘சீசர் மஸ்ட் டை"Caesar Must Die" 62 வது ஆண்டுப் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படம் (கோல்டன் பியர்) விருது பெற்ற இத்தாலி நாட்டுத் திரைப்படம்.

ப்படத்தை திரைக்கதை எழுதி இயக்கியவர்கள்  பாலோ (Paolo) மற்றும் விட்டோரியோ டாவியானி (Vittorio Taviani)  என்ற இரு சகோதரர்கள். வில்லியம் ஷேக்ஸ்பியரின் நாடகமே இப்படத்தின் மூலக்கதை..அதை திறம்படத் திரைக்கதை எழுதி விருது பெரும் அளவுக்கு இயக்கியது இந்த எம்பது வயதை தாண்டிய சகோதரர்களின் சாதனை.

 

ஷேக்ஸ்பியரின் 'ஜூலியஸ் சீசர்' நாடகத்தின் ஒரு சிறிய கருவை எடுத்து அதிகப் பட்ச பாதுகாப்பு நிறைந்த ரேபிபியா (Rebibbia) சிறையில் ஒரு கைதிகள் குழு நடத்தும் நாடக நிகழ்சியாகவே கதை செல்கிறது. இப்படம் வாழ்க்கைக்கும் கலைக்கும் இடையே உள்ள உறவை 76 நிமிடங்கள் விவரிக்கிறது.

இப்படத்தின் தொடக்கம் இறுதிகட்டத்தில் தொடங்கிச் சிறையில் நடக்கும் அந்த நாடகத்தின் ஒத்திகை மற்றும் பல நிகழ்வுகளை ப்ளாஷ் பேக்காகச்  சொல்கிறது.    
இப்படத்தின் முக்கியம் அதன் அரசியல் பிரதிபலிப்பு. சமகால இத்தாலிய அரசியல்.அதிகாரப் போராட்டம்.தோல்வியைத் தழுவும் கருத்தியல், புரச்சிகர இனவாத நடவடிக்கை,மற்றும் நடைமுறைக்கு ஒத்து வராத கோட்பாடுகள் போற்றவற்றுக்கு இது ஒரு எச்சரிக்கை கதை.
இத்திரைப் படம் Rome's Rebibbia Prison-சிறையில் தான் எடுக்கப்பட்டது. இதில் நிறைய நடிகர்கள் கொடூரமான குற்றங்கள் செய்து தண்டனை பெற்ற  சிறைக்கைதிகள். விமரிசகர்கள் இதை ஒரு சிறந்த டாக்குமெண்டரி படமாகவே பார்த்தாலும் மென்மையான நகைச்சுவை கலந்த உணர்ச்சி மிக்க "ஆழ்ந்த மனிதநேய படம்"என்று விவரிக்கின்றனர். 
இப்படம் நிறைய நிகழ்ச்சிகளைக் கருப்பு-வெள்ளையாக காட்டினாலும் அதுவும் நமது கலைப் பட இயக்குனர்களின் முந்தய கருப்பு-வெள்ளை திரைப்படங்கள் போல, கதைக்குத் தேவையானதாகவே உள்ளது. இதன் ஒளிப்பதிவாளரின் திறமை சிறையை சிறப்புடன் காட்டியதில் காணாலாம் 
இப்படத்தின் இயக்குனர்கள் நம்புவது-இப்படத்தைப் பார்த்தவர்கள்  பயங்கரமான குற்றம் செய்த கைதிகளுக்குள்ளும் மனிதாபிமானம் இருப்பதை உணர்வார்கள் என்பது. அது உண்மைதான்...நாமும் உணரலாம் (பொறுமையாக..?) இப்படத்தை பார்க்கும் நிதானம் ம்மிடம் இருந்தால்....  


thanks-source from here
thanks-img from here 



இப்படத்தின் விளம்பர காட்சி-

                     thanks-youtube-sydfilmfest

  முழுப் படத்தையும் காண...
                       thanks-YouTube-by 237homer

 
    
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1