google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: DTH-ல் விஸ்வரூபம்..விபரித முடிவா?

Tuesday, December 11, 2012

DTH-ல் விஸ்வரூபம்..விபரித முடிவா?



சிரிப்பு மந்திரி-
ஏண்டா அறிவுச்செல்வா....
என்னடா..இப்படி பண்ணிட்டாரு
நம்ம உலக நாயகரு...

DTH-ல படத்த வெளியிட்டா
திருட்டு D.V.D பயமே இல்லையா..?.

அது எப்படிடா...?

இப்பவே நம்ம கேபிள்கார தம்பிக
எப்படி அத கேபிளுக்கு மாத்தலாமுனு
ஆராய்ச்சியில இறங்கிட்டாங்கடா...

அதாவது பரவாயில்ல....

நம்ம கள்ள டிக்கட்டு சொர்ணக்கா
இப்பவே வீட்டு வாசல்ல....
‘இங்கே விஸ்வரூபம் காட்டப்படும்னு
போர்டு மாட்டிவச்சி...
தரை டிக்கெட் 50 ரூபா
பெஞ்ச் டிக்கட்டு 100 ரூபா-னு
வசூல் பண்ண ஆரம்பிசிட்டுதடா...  

இதைவிட மோசம் ஒன்னு இருக்குடா...

ஆயிரம் ரூபாய்க்கு DTH-ல காட்டுனா
அவனவன் வீட்டுல உக்கார்ந்து
செல்போன்ல படம்பிடிச்சி....
அய்யாயிரம் பேருக்கு அனுப்புவான்டா...
வீட்டுலேயே சிடி கடை வச்சிருவான்டா..
இது திருட்டு D.V.D-யை விட மோசமடா...

வெளிநாட்டுல காட்டுராங்கனா 
அது  வேறு விசயமடா....
நம்ம ஆளுக கடோத்கஜனுங்க....

(அண்ணேன்...
அவரு பெரிய ஆளு...ண்ணேன்
அதுல வேற அய்டியா வச்சிருப்பாரு.)

என்ன அய்டியாடா.....
கிளைமாக்ஸ் இல்லாம காட்டுவாரா...?

ஏதோ எனக்குத் தோணிச்சு...
கமலு நம்ம பகுத்தறிவு பிள்ளையாண்டா
கஷ்ட்டப்பட்டுப் படம் எடுத்துட்டு
காயப்பட்டு நிற்கக் கூடாதுன்னு....


****************************************








                                        

       Thanks-video-YouTube-Nikhilschannel










(அன்பர்களே!...இது ஒரு நகைச்சுவை பதிவே...தவிர யார் மனதையும் புண்படுத்தவோ...யாருக்கும் ஆதரவாகவோ எழுதப்படவில்ல...நன்றி!)


Thanks-images from here
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1