google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பதிவர் மதுமதியின் விழிப்புணர்வு செய்தி!

Thursday, December 20, 2012

பதிவர் மதுமதியின் விழிப்புணர்வு செய்தி!

 

இங்கு ஓட்டைப் பேருந்தில்
பள்ளிச் சிறுமி விழுந்து
ஓடும் பேருந்தின் சக்கரங்களில்
உருக்குலைந்து மரணித்தபோது...
 
இங்குப் படிக்கட்டில் பயணித்து
நாலு மாணவர்கள் நசுங்கி
மரணத்தைத் தழுவியபோது....

அவசரம் அவசரமாக
புதுப் புதுச் சட்டங்கள்
இங்கு எல்லாமே
முடிந்த பிறகுதான் துவங்குமா?

இன்னும் நிறைய ஆபத்துக் காரணிகள் 
இருக்கு நிறைந்து இந்த நாட்டில்...
எல்லோருக்கும் தெரியும்
தெரிந்தே போகிறார்கள் மரணத்தைத் தேடி....
இங்கே பிரபலங்கள் என்பவர்கள்
இதற்கு விழிப்புணர்வு செய்வார்களா...?

இதோ....
கைபேசியின் மாயங்கள்.
வாகனம் ஓட்டும் போது
அவைகள் செய்யும் காயங்கள்

இதோ இந்தக் காணொளியைக் காணுங்கள்
கைபேசியுடன் கார் ஓட்டும் காரிகை
இது அமெரிக்க அரசு வெளியிட்ட 
விழிப்புணர்வு செய்திப்படம்
ஒர் உண்மை சம்பவத்தின் பிரதிபலிப்பு.




                    thanks-youtube-unixnewbie


இப்பதிவை வெளியிடும் முன்
என் முகநூலில் ஒரு காணொளி...
மூத்த பதிவர் மதுமதியின் பதிவு
அவரது மகள் மஞ்சரியின்
மழலை மொழி வேண்டுகோள்...
புகைப்பிடிப்போருக்கு ஒரு விழிப்புணர்வு...
நன்றி-
மதுமதி
தொடர்ச்சியாகப் புகைப்பிடித்துக்கொண்டிருந்த என் நண்பன் தற்போது அதற்கான சிகிச்சையில் இருக்கிறான். என் செல்ல மகள் மஞ்சரியின் வாயிலாக மற்றத் தோழர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை தந்திருக்கிறேன்..ஒன்றரை நிமிட இக்காணொளியைக் காணுங்கள்..புகைக்காமல் இருக்க முயற்சி எடுப்போம்.

காணொளி.....No smoking awareness given by baby Manjeri Madhu 



                                                  thanks-youtube-by Madhu Mathi


வாருங்கள் நண்பர்களே!
பதிவர் மதுமதியை வாழ்த்துவோம்!
நாடும் நாளிதழ்களும்
நாட்டு பிரபலங்களும் செய்யாதவைகளை
தனது வலைத்தளம் மூலம் செய்யும்
நண்பர் பதிவர் மதுமதியை வாழ்த்துவோம்! 

குறிப்பு-இப்பதிவு hits-க்காக அல்ல..என் முகநூலில் மதுமதி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு என் பதிவோடு இணைக்கப்பட்டுள்ளது.
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1