google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நீதானே என் பொன்வசந்தம்-காதலா? காமமா?

Wednesday, December 19, 2012

நீதானே என் பொன்வசந்தம்-காதலா? காமமா?




‘நீதானே என் பொன்வசந்தம்-
இதில் விஞ்சி நிற்பது காதலா...? காமமா...?
திண்டுக்கல் லியோனிதான் சொல்லவேண்டும்?.

இசைஞானியின் இனிய இசையில்
முத்துக்குமாரின் மோகன வார்த்தைகளில்...
திரை வசனத்தை காணவில்லை! 
உரையாடல்களை விட கவித்துவமே அதிகம்.

ஆரம்பம் முதல் கடைசி வரை ஊடலும் கூடலும்
அய்யன் வள்ளுவரின் காமத்துப்பாலைகரைத்துக் குடித்துவிட்டு...
கதை வசனம் எழுதியது போல்...
இது காமத்துப்பாலின் கதம்பமாலை..!

மாத்தியோசி! என்பார்களே அப்படித்தான் கெளதம்மேனன்  
விண்ணைத் தாண்டி வருவாயா?
மாத்தியோசித்ததின் விளைவே நீதானே என் பொன்வசந்தம்.

ஜீவாவின் முகத்தில் தெரிவது..? இதுதான் காதலா...?
ராதிகா என்ற உறவுப்பென்னை திருமண மேடையில்
அம்போன்னு விட்டுவிட்டு..
கதாநாயகி வீட்டில் வீரவசனம் பேசுவது
இதுதான் காதலா...?
சமந்தாவின் முகத்தில் காதலின் சாயலே இல்லை
அசடு வழிகிறது காமம்.
அர்த்த சாமத்திலும் எழுந்து நடமாடும் காதல்..?

அவ்வப்போது ஆறுதல் இளையராஜாவின் இனிய குரல்
முத்துக்குமாரின் வார்த்தைகள்
இவர்கள் இருவருமே கதாநாயகன்-கதாநாயகி
இவர்களுக்குத்தான் இசை பொன்வசந்தம்!

நல்லதொரு இசைக்கச்சேரி கேட்டதுபோல்? 
அல்ல...பார்த்ததுபோல் உணர்வு!

சந்தானம்...காமெடி சத்தான காமெடியா?
அவர்களே பேசி அவர்களே சிரிக்கும்
வித்த்யாசமான காமெடி...
நமக்குத் தொண்டைக்குள்ளேயே
அடங்கிப்போகுது சிரிப்பு.

சில முத்தக்காட்சிகள் இல்லையென்றால்...
விரசமில்லா காதல்..!

ஏதோ PEEPING TOM போன்று
அன்றைய சபையர் தியேட்டரில்
படம்பார்க்க வந்து சல்லாபம் செய்து மகிழும்
கள்ளக் காதலர்களை உற்றுப்பார்த்த உணர்வு

மெரீனா கடற்கரையில் கடலை போடும் காதலர்களை
கண்டுணர்ந்த உணர்வு...

அப்பாடா..ஆஸ்திரேலியா- கேம்பிரிட்ஜ்
அப்படி இப்படினு சொல்லிப்புட்டு

ஏல..சூச..என்னல நம்ம ஊருக்கு வந்துட்டாங்கல..
அதுதான் நம்ம மணப்பாடு-ல..

திரையில் பார்க்கும் போது
சாய்ந்துப்போன பனைமரங்களும்
காயிந்துபோன தென்னைகளுடன்..
மணப்பாடும்  ஆஸ்திரேலியாவே!
ஒளிப்பதிவாளரின் சாதனையா?
நவீன கேமிராக்களின் சாதனையா?

இப்போதெல்லாம்
இப்படித்தான் இருக்கிறது திரைப்படங்கள்
டாஸ்மாக் மதுபோதை மூன்று மணி நேரம்
தியேட்டர்கள் காட்டும் சினிமாபோதை.....?
காதல் போதை வேண்டுபவர்கள்
கட்டாயம் பார்க்கவேண்டிய படம்! 

                      thanks-youtube-by navsuper007


 thanks img from here
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1