google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சச்சின் - இந்தியத் தாயின் செல்லமகன்!

Monday, December 24, 2012

சச்சின் - இந்தியத் தாயின் செல்லமகன்!





மே 29-30, 1999 இந்தியா vs இங்கிலாந்து, உலக கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் பர்மிங்காம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்தபோது நேரடியாக காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

உற்ச்சாகத்தில் இருக்கையின் மீது ஏறி நின்று கோசமிட்டபோது கீழே விழுந்து காலில் அடிபட்டதுகூட தெரியாமல்...சச்சின் சச்சின் என்று ஆரவாரம் செய்தது இன்றும் நீங்காத நினைவாக இருக்கிறது.

நான் மட்டுமல்ல அந்த ஸ்டேடியத்தில் குழுமியிருந்த அத்தனை இந்தியர்களுக்கும் இதே உற்சாகம் சச்சின் மீது. ஆங்கிலேயர்களுக்கும் கூட அவர்மேல் அப்படி ஒரு பிரியம்.

ஸ்டேடியம் முழுவதும் SACHIN IS GOD என்று எழுதப்பட்ட அட்டைகள். சச்சின் படம் போட்ட T-SHIRT அணிந்தவர்கள் அதிகம். எனக்கு T-SHIRT கிடைக்காததால் பத்து பவுண்ட் (800 ரூபாய்)-க்கு இந்திய கொடி ஓன்று வாங்கி தோளில் போட்டுக் கொண்டு இந்தியன் என்று பெருமை கொண்டேன்..அன்று அந்த பெருமைக்கு காரணம் சச்சின் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும்.

அங்கே சச்சின் போன்ற தோற்றத்தில் ஒருவர் அவருக்கு கை கொடுப்பதும் அவர் அருகில் நின்று புகைப்படம் எடுப்பதற்கும் போட்டோ போட்டி. நானும் விடுவேனா அவர் அருகில் நின்று ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு இன்றுவரை சச்சினுடன் எடுத்துக்கொண்டதாகவே பெருமிதம் கொள்கிறேன்.

இந்தியாவின் புகழுக்கு கிரீடம் சூட்டுபவர்கள் சூட்டியவர்கள் ஒவ்வொரு துறைகளிலும் எத்தனையோ பேர்...அத்தனை பேர்களிலும்  சச்சின் இந்தியத் தாயின் செல்லமகன் ...அவருடைய ஓய்வு..காலத்தின் கட்டாயம் என்றாலும் மனம் கலங்குகிறது.   

                  ...............................................பரிதி.முத்துராசன் 

****************************************************************
இது சிரிக்க....

PARITHI MUTHURASAN

1995-Paris eiffel tower


 

Shakkana M. NIJAM


கழுத்து வலிக்குதுங்க : ) கோபுரத்தை போல் சாய்ந்துகொண்டு பார்ப்பது :)
PARITHI MUTHURASAN

நண்பரே அப்போது என்னிடம் ஒரு சாதாரனமான கேமராத்தான் இருந்தது...அதைவைத்து இந்த கோணலில் எடுத்தேன்..அதுதான் படம் கோனிக்கொண்டு இருக்கு... அது-டவர் நேராகத்தான் இருந்தது..
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1