google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தில்லி என்றாலே தில்லு முல்லா..?

Thursday, December 27, 2012

தில்லி என்றாலே தில்லு முல்லா..?


தில்லி-
கி.மு. 6-ம் நூற்றாண்டிலிருந்து
அங்கே மக்கள் வசித்தார்களாம்
புரானகாலத்திலும்
பாண்டவர்களின் தலைநகரமாம்  

மவுரிய அரசன் தில்லு பெயரே
திரிந்து தில்லி..ஆனதாம்
அழகுபடுத்தியது ஷாஜகான்
அபகரித்தது ஆங்கிலேயர்.

தலைநகரமாய் இருப்பதாலோ
தில்லியின் தலைவிதி
அவ்வப்போது அடிமையாய்..?
கடும்பாடுபட்டு விடுதலை
ஆங்கிலேயரிடமிருந்து..

ஆனாலும்
இன்னும் அடிமையாகவே
இருக்கிறது தில்லி
ஊழல்வாதிகளிடம்
மத வெறியர்களிடம்
காம வெறியர்களிடம்

அடகுகடைக்குப் போகும்
தங்க நகை போல்
தலைநகரம் தில்லியும்
அயிந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை
அடகு போகிறது ஆட்சியாளர்களிடம்!

அது சரி...
அங்கே என்ன இருக்கு...?
எங்க ஊரில் மாடு மேய்க்கும்
மண்ணாங்கட்டியும்
மல்லாக்கப் படுத்துக்கிட்டு
தில்லிக்கு ராஜாவாகும்
கனவோடு திரிகிறான்...?

தில்லி முல்லு தில்லு முல்லு
தில்லு பெயரே ‘தில்லி’யானதால்
தில்லி என்றாலே தில்லு முல்லா..?
  


......................................................பரிதி.முத்துராசன் 


**********************************************************************
கடைசிச் செய்தி.....
தில்லி இன்று
தமிழ்நாட்டை 
அவமானப்படுத்தி விட்டதாம் ...?
மணியடித்து நம் அம்மாவை 
பத்து நிமிடங்களுக்கு மேல்...
பேச அனுமதிக்கவில்லை.
பிறகு எப்படி கதை சொல்வது...?


பிரதமர் கூட்டத்தில் இருந்து 

அம்மா  கோபத்துடன் வெளிநடப்பு



இன்று மட்டுமா..?
என்றுமே அப்படித்தான்...!  
மௌனகுருவுக்கு 
பேசுவது பிடிக்காது என்பதாலா...?
அடுத்து அம்மாவையே  பிரதமராக்கிடலாம்...
பேசும் பிரதமர்...கதை சொல்லும் பிரதமர் !
  ..................இது நானல்ல ...டீக்கடை மன்னாரு 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1