google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கார்த்தி-சகுனியும் அலெக்ஸ் பாண்டியனும்

Sunday, January 06, 2013

கார்த்தி-சகுனியும் அலெக்ஸ் பாண்டியனும்







2012-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் படங்களில் காதல் திரைப்படங்களே அதிகம்
சமுக அக்கறையுடன் வந்த படங்கள் சில. தேசப்பற்றுடன் வந்த படங்கள் சில.அரசியல் பற்றிய திரைப்படம் ஒன்றே ஓன்று-சகுனி மட்டுமே! 

இந்தக் காலக்கட்டத்தில் அரசியல் படம் எடுப்பது கத்தி மீது நடப்பது போன்றது.திரைக்கதையில் கொஞ்சம் தடுமாறினாலும் எல்லோருக்கும் சங்கடம். கிணறு தோண்டப் போக பூதம் வந்த கதையாகிவிடும்.

அப்படியும் துணிச்சலுடன் திரைக்கு வந்த சகுனியை பாராட்ட வேண்டும்.அதில் நடித்த இளம் கதாநாயகன் கார்த்தியை வாழ்த்துவோம் நடித்த,இயக்கிய,தயாரித்த ...இவர்களின் முயற்சிக்கு ஊக்கமளிப்போம்.  

சகுனி-இது ஓர் அரசியல் நையாண்டிப் படம்.சங்கர் தயாள் இயக்கத்தில் கார்த்தியின் கலகலப்பான நடிப்புடன் வந்த திரைப்படம் இது போன்ற அரசியல் படத்தில் நடிப்பதற்குக் கொஞ்சம் தில் போதாதாது...நிறையவே வேண்டும்

படத்தின் தொடக்கமே முதல்வர் (Satyamoorthy)ரின் மரணமும் அதன் பின்னணியில் இருக்கும் இன்னொரு அரசியல்வாதி பிரகாஷ்ராஜின் அரசியல் சதியும் ஆகும்.
அரசியல் சதுரங்க விளையாட்டை நகைச்சுவையுடன் சொல்வதாக நினைத்து விருவிருப்பாகத் துவங்கிய திரைப்படம் அரசியல்வாதிகளைச் சர்க்கஸ் கோமாளிகள் போல் காட்டி  (அது என்ன?) லாஜிக் இல்லாமல் அப்படியே காதல்,நகைச்சுவை என்று சறுக்கியபடி போய்.....

சதுரங்க விளையாட்டு போலவே திரைக்கதை தலைவலி தந்தது.
கார்த்தி-சந்தானம் கூட்டநியரின் நகைச்சுவை கொஞ்சம் வலி நிவாரணி போல் இருந்தது.அது சரி...அலெக்ஸ் பாண்டியன் எப்படியிருக்கும்?.

இது ஒர் அதிரடி மசாலா படம் என்கிறார்கள் ஆனால்
ஒரு பக்கம் காமெடி கலாட்டா என்று விளம்பரம் செய்கிறார்கள்
இன்னொருபுறம் கார்த்தியோ பேட்டை ரவுடி போன்று நிற்கிறார்
மற்றொருபுறம் கையில் துப்பாக்கியுடன்....இது இயக்குனர் சுராஜ்-க்கே வெளிச்சம்.

அரசியலும் இல்லாமல் காமெடியும் இல்லாமல் சகுனி போல் திரைக்கதையில் தடுமாறாமல் தள்ளாடாமல் அலெக்ஸ் பாண்டியன் வெற்றி நடை போட வேண்டும்
தெலுங்கில் வேண்டுமெனில் BAD BOY-யாக இருந்துவிட்டுப் போகட்டும் இங்கே GOOD BOY-யாக இருக்கட்டும்  
நாமும் வெற்றி பெற வாழ்த்துவோம். வாழ்த்துக்கள் 


                              thanks-YouTube-by-seventhstarcompany
 **************************************************************************
அலெக்ஸ் பாண்டியன் - படத்தின்விளம்பர காணொளியைப் பார்த்தீர்கள் அல்லவா...? உங்கள் கருத்தை வாக்களியுங்கள்.....

அலெக்ஸ் பாண்டியன் வெற்றி 

எப்படி இருக்கும்...?

வாக்களித்தமைக்கு நன்றி....முடிவு...09/01/2013...4 மணி வரை மட்டுமே!

**************************************************************
இப்பதிவைப் பற்றிய தங்கள் கருத்து........? இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1