google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கேள்வி இங்கே! பதில் எங்கே? இலவசம்!

Monday, January 07, 2013

கேள்வி இங்கே! பதில் எங்கே? இலவசம்!


அன்று கர்மவீரர்
பள்ளிச் சிறுவர்களுக்கு..
பசியைத் தீர்க்க
இலவச மதிய உணவளித்தார்..

அதில் இருந்தது
அவரின் பொதுநலமாக
இந்த நாட்டின் கல்வி வளர்ச்சி.





இன்று இலவசங்கள் நிறைய

மாணவ மாணவிகளுக்கு
சீருடையிலிருந்து
கணணி வரை...
இதில் இல்லை சுயநலம்
என்றே நினைப்போம் நன்றாய்

ஏழை எளியோர்களுக்கும்
நடுத்தர வர்க்கங்களுக்கும்
உணவுப்பொருள் முதல்
ஊதாரிப் பொருட்கள் வரை...

உணவுப்பொருட்கள்...?
இதில் இல்லை சுயநலம்
என்றே நினைப்போம் நன்றாய்



உதாரிப் பொருட்கள்...? 

இதில் என்ன இருக்கிறது
கட்சிகளின்
சுயநலமா? பொதுநலமா?



ஆட்சிக்கு வரவேண்டும் என்று
கட்சிகள் கொடுக்கின்றனவா?

கடந்த ஆட்சிமாற்றம்
இதனால்தான் வந்ததா..?

மக்கள் இலவசங்களை
விரும்புகிறார்களா?

கேள்வி இங்கே! பதில் எங்கே? 

                                                ...................பரிதி.முத்துராசன் 

***************************************************************************
கருத்துக்கணிப்பு-

இலவசங்களை கட்சிகள் வழங்குவது...


மக்கள் ஊதாரிப் பொருட்களை இலவசமாகப் பெற...


வாக்களித்தவர்களுக்கு நன்றி!முடிவு தேதி-13/01/2013
******************************************************************************************
 இது சிரிக்க.....


நீ கொடுக்கலைனா 
நான் எடுத்துக்குவேன்...?






இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து......?

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1