google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: 2012:சினிமா-நல்லா ந(க)டிச்சது யாரு?

Tuesday, January 08, 2013

2012:சினிமா-நல்லா ந(க)டிச்சது யாரு?




இது ஒரு நகைச்சுவைப் பதிவு மட்டுமே! யாரையும் புண் படுத்தும் நோக்கமல்ல. கொஞ்சம் மாற்றி யேசிச்சதின் விளைவு!
இங்கே முதல் 10 தமிழ் படங்கள் மட்டுமே வரிசையில்....அதுவும்
அவைகள் 2012:சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூலை வைத்தே..

இவைகளில் நடித்த சில நடிகர்கள் அவர்களை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர்கர்களை வேண்டுமானால் (கையைக் கடிக்காமல்) நஷ்டப்படுத்தாமல் இருந்திருக்கலாம்...?

ஆனால்..பணம் கொடுத்தும் நேரத்தை செலவழித்தும் மிகுந்த நம்பிக்கையுடன் படம் பார்க்கப் போன நம்மளைப் போன்ற பார்வையாளர்களைச் சில திரையரங்கங்களின் கொசுக் கடி மூட்டைப்பூச்சிக் கடியை விட மோசமாக கடித்த...? சாரி... நடித்த...? ந(க)டிகர்கள் நிறையபேர்... .


(யோவ்..பரிதி! கோடிகள் செலவு செய்து படம் எடுக்கிறோம் நீ அய்ம்பதோ நூறோ கொடுத்துப் படம் பார்த்துவிட்டு கேடி மாதிரி எழுதுகிறாயே என்று சண்டைக்கு வராதீர்கள்)

பில்லா II-வசூலில் முதலிடம் (2,79,30,353) பெற்ற இத்திரைப்படம் ‘தலஎன்று ரசிகர்கள் தலை மீது வைத்து தாங்கும் அஜித் குமார் நடித்தது. துவக்கத்தில் அமர்களமாக இருந்த இப்படம் கொலைக்களமாக மாறிவிடுகிறது..அஜித்தின் பஞ்ச் டயலாக் அதிரடி என்பார் பலர் அதுவே கடி என்பார் சிலர் 
துப்பாக்கி-வருடக்கடைசியில் வந்தாலும் இன்றுவரை வசூலில்(2,54,46,346) இரண்டாவது இடத்தைப் பிடித்த படம். இதன் நடிகர் விஜய்-யின்  ‘சுறா கடியிலிருந்து மாறுபட்ட நடிப்பு என்பார் பலர். இல்லை இதுவும் ஒருவகை காக்கா கடி என்பார் சிலர்.

சகுனி-வசூலில் (2,27,19,252)மூன்றாவது இடத்தில் இருக்கும் இது கார்த்திநடித்த அரசியல் நையாண்டிப் படம் ... (கோமாளி)அரசியல்வாதிகள்..? பற்றிய கதைக்கு ஏற்ற நடிப்பு என்போர் பலர்.இல்லை சித்ரவதை கடிப்பு என்போர் சிலர்.


மாற்றான்-இது வசூலில் (2,23,42,684) நான்காவது இடத்தில் சூர்யா ஊட்டசத்து பானம் பற்றிய கதையில் ஊட்டசத்து ரொம்பக் குறைவு..ஓட்டிப் பிறந்த இரட்டையராகச் சூர்யா நடிப்பு புது முயற்சி என்பார் சிலர். அதுவே அலர்ச்சி என்பார் பலர்.  
 
தாண்டவம்-நடிகர் விக்ரம் நடித்த இத்திரைப்படம் வசூலில் (1,92,15,635)ஐந்தாவது இடத்தில் உள்ளது. கதை தேசப்பற்று உள்ளதுபோல் தெரியும். விக்ரமும் இடையில் பார்வை இழந்தவராக (ஏதோ வௌவால் உணர்வுடன்) பாவம் ரொம்பச் சிரமப்பட்டு நடித்தார். நடிப்பை கதை சிதைத்தது என்பார் பலர்.இல்லை நடிப்புத்தான் கதையைச் சிதைத்தது என்பார் சிலர்.

ஒரு கல் ஒரு கண்ணாடி-வசூலில்(1,73,32,944) ஆறாவது இடத்தில் உள்ள இப்படத்தின் கதாநாயகி ஹன்ஷிகா போன்று ‘கும்மென்று கதை . கதாநாயகர் அரசியல் தலைவரின் வாரிசு...உதயநிதி ஸ்டாலின் ஓகே! ஒகே! ஆனால் அது தெரியாதவண்ணம் நடித்தார்? என்பார் சிலர். அவர் எங்கே நடித்தார்? அது சந்தானத்துக்கே வெளிச்சம் என்பார் பலர்.

நீதானே என் பொன்வசந்தம்-இது வசூலில்(1,70,70,516) ஏழாவது இடத்தில் இருக்கிறது. கதை-காதலா? காமமா? சாலமன் பாப்பையா விடம்தான் கேட்கவேண்டும். ஜீவா காதல் முகமூடி போட்டு நடித்தார் என்பார் சிலர்.இல்லை இயல்பாக நடித்தார் என்பார் பலர்.


 
முகமூடி-இது வசூலில் (1,49,34,812)எட்டாவது இடத்தில்.பல விருவிருப்பான படம் தந்த மிஸ்கின் இதில் சோர்வடைந்து தூங்கி விட்டார் என்பவர் பலர் இல்லை நம்மை தூங்க வைக்க அவர் எடுத்தப் படம் என்போரும் உண்டு.ஆனால் இந்தக் கதையைப் புரிந்துகொள்ள இங்கே எவரும் இல்லை என்பார் அவர்.இதுவும் ஜீவாநடித்த படம் அவர் முகத்துக்கு ஏற்ற மூடி இல்லையோ? 

போடா போடி-இது வசூலில்(1,39,38,579) ஒன்பதாவது இடத்தில்.. கதை-காதல்?...லண்டன் வாழ் தமிழ் டான்சர்களான சிம்பு-வரலக்ஷ்மி வின் தமிழ் பண்பாடு ஆண்-பெண் ஆதிக்க ஊணர்வின் வெளிப்பாடு. நடிகர் சிம்பு ஒஸ்தி நடிப்பு இல்லை  என்பார் பலர். இல்லை இது என்ன வகை நடிப்பு என்று  இன்னும் யோசிப்போர் சிலர்.


அட்டகத்தி- வசூலில் (1,32,17,742) பத்தாவது இடத்தில் இருக்கும் இது  நகைச்சுவைக் காதல் திரைப்படம். இயக்கம் பா.ரஞ்சித்.நிறைய இயக்குனர்களின் பாராட்டைப் பெற்றவர்.அவப்போது காதல் மன்னனாக உலாவருவதும் தோல்வியில் கீழே விழுந்தாலும் துவண்டுவிடாமல் எழுந்து நின்று மீண்டும் மீண்டும் காதல் மன்னனாக....தினேஷ் நடிப்பு புதுசு என்பார் பலர் அரைத்த மாவு என்பார் சிலர். 

இப்போது உங்களுக்கு தெரிந்திருக்குமே நல்லா கடிச்ச சாரி நடிச்ச நடிகர் யார் என்று? இனிமேலாவது இனிவரும் படங்களில் இவர்கள் இந்த கடி-பிடி-அடி-தடியுடன்  கடித்து..? நம்மைக் கொல்லாமல் நடித்து நம்மைக் காக்க எல்லாம் வல்ல தாமஸ் ஆல்வா எடிசனை வேண்டிக் கொள்வோமாக!        
                               ........பரிதி.முத்துராசன் 
(குறிப்பு-இப்பதிவின் கருத்துக்கணிப்பு சில குளறுபடி காரணமாக நீக்கப்பட்டது...வருந்துகிறேன்) 
*************************************************************  

இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து.....?
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1