google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: எங்க வீட்டு பூனைக்குட்டி!

Friday, January 18, 2013

எங்க வீட்டு பூனைக்குட்டி!

kitten

நாங்கள் வசிப்பதோ நான்காவது மாடியில்  புறாக்கூண்டு அளவில் ஒரு சிறிய வீடு  எங்க வீட்டில் எங்களுக்கே இடம் போதாது அதனால் நிறையப் பூனைகள் வருவார்கள் போவார்கள் யாரும் தங்க மாட்டார்கள் 

எல்லோருக்கும் நல்ல சாப்பாடு உண்டு அவ்வப்போது வருவார்கள் சாப்பிடுவார்கள் போய்விடுவார்கள் பக்கத்து தெரு பக்கத்து வீடு அனைத்து பூனையார்களுக்கும்  இங்கே சாப்பாடு உண்டு 

அவைகள் எண்ணிக்கை கூடுவதும் குறைவதும் வாடிக்கை.  இன்னொரு வேடிக்கை-ஒவ்வொரு பெண் பூனையும் திடீரென்று ஓன்று அல்லது இரண்டு குட்டிகளுடன் வருவார்கள்  



kitten
 அன்றொருநாள் அடைமழையில் தாய் பூனை ஓன்று என்னைச் சுற்றி சுற்றி வந்து ஏதோ சொல்வதுபோல் இருந்தது எனக்கும் என் மனைவிக்கும் எதுவும் புரியவில்லை ஆனால் எனது மகன் அந்தப் பூனை எங்கேயோ அழைக்கிறது என்று அதன் பின்னாடி போனான்.
அங்கேபோய்ப் பார்த்தால்  மூன்றாவது மாடி சன்னல்மேல்தடுப்பு தட்டில்அந்தத் தாய் பூனையின் குட்டி பரிதவித்துக்கொண்டிருந்தது.நல்ல அடைமழை வேறு. இரவு நேரம் வேறு ரொம்ப ஆபத்தான இடம் எப்படி அதைத் தூக்குவது என்று தெரியவில்லை 



petஎன் மகன் ஒரு பிளாஸ்டிக் வாளியில் கொம்பு கட்டி மிகுந்த சிரமத்துக்கிடையில் அந்தப் பூனைக்குட்டியை காப்பாற்றினான் அன்றிரவு முழுவதும் அந்தப் பூனைக்குட்டி எங்கள் வீட்டில் தஞ்சம் 
அடுத்த நாள் அது போய்விடும் என்று நினைத்தால்  போகவில்லை விரட்டினாலும் போவதில்லை இது நடந்து மூன்று மாதங்கள் 

pet

ஆகிவிட்டது இன்று வரை அந்தப் பூனைக்குட்டியும் என் மகனுடன் ஒட்டி உறவாடுகிறது இருவரும் இணைபிரியாத நண்பர்கள் அவன் படுக்கை மீது அவனருகில்தான் படுத்து உறங்கும் எங்களுடனும் நன்றாக நட்புடன் பழகும் 

படுக்கையில் அதைத் தொல்லை செய்தால் பொய்யான கோபம் கொள்ளும் 
(இதில் எந்த பிராணியும் துன்புறுத்தப்படவில்லை...!)
இந்தக் காணொளியை ப் பாருங்கள்......


******************************************************************************
 இப்பதிவை பற்றிய தங்கள் கருத்து....?
(யோவ்...பரிதி!.உனக்கு ரொம்ப குசும்புத்தான்யா...மொக்கைக்கும் கருத்தா....? நல்லவேளை இதுக்கும் கருத்துக்கணிப்பு வைக்காமல் விட்ட....
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1