google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: டாஸ்மாக்-தொழில் ரகசியம் என்ன?

Thursday, January 17, 2013

டாஸ்மாக்-தொழில் ரகசியம் என்ன?

TASMAC



நதிமூலம் ரிசிமூலம் காணக்கூடாது என்பார்கள்
அதுபோல்தான் மதுமூலம் காணப்போனால்
நமக்கும் தலை சுற்றும் மது அருந்தாமலேயே...
அதிலும் டாஸ்மாக் வளர்ச்சியை ஆராய்ந்தால்............

பெயர்.........................................................டாஸ்மாக்
தந்தை பெயர்..........................................பு.தலைவர்
புனைப்பெயர்............................................நேப்போலியன்,
                                  எம்.சி,
                                 கிழட்டு சாமியார்
                                 (ஓல்ட் மாங்)....

ஊர்..........................................................தமிழ் நாடு
உரிமையாளர்.......................................தமிழ்நாடு அரசு
மதம்.......................................................சர்வம்
சாதி.........................................................சமத்துவம்
பிடித்தவர்கள்..........................................ஏழைகள்,
                                போக்கிரிகள்,
                                கூலிகள்,...
பிடிக்காதவர்கள்..................................காந்தி,
                                மகாவீர்,
                               திருவள்ளுவர்,...
வேலை நேரம்....................................10 Am to 10 PM
                               (இடைவேளை இல்லை)
பிறப்பு.....................................................1983
இறப்பு......................................................????????????
                         (அதுக்கு வரும்? வராது? தெரியாது!.
                          அருந்துபவர்களுக்கு வரும்
                          எப்போது வரும்...? எப்படி வரும்......?
                           எமனுக்குத்தான் தெரியும்)  

பிடித்த நாட்கள்.............................தீபாவளி
                            புத்தாண்டு
                            பொங்கல்

வளர்ச்சி.........................................20 விழுக்காடு வருடம்தோரம்
வளர்ச்சி அட்டவணை-
டாஸ்மாக்-வருடாந்திர வருமானம்
நிதியாண்டு
வருவாய்(கோடியில்)
 % வளர்ச்சி
2002 - 03
2,828.09

2003 - 04
3,639
28.67%
2004 - 05
4,872
33.88%
2005 - 06
6,086.95
24.94%
2006 - 07
7,300
19.93%
2007 - 08
8,822
20.85%
2008 - 09
10,601.5
20.17%
2009 - 10
12,491
17.82%
2010 - 11
14,965.42
19.80%
2011 - 12
18,081.16
20.82%


டாஸ்மாக்-கின் இந்த மாபெரும் வளர்ச்சியைப் பார்த்தால்
டாஸ்மாக்கே! உன் வளர்ச்சியின் தொழில் ரகசியம் என்ன...?
எனக்கும்தான் கொஞ்சம் சொல்லித்தருவாயோ...?

நானும் எத்தனையோ தொழில்கள் செய்தேன்
கையை சுட்டுக்கொண்டதுதான் மிச்சம்
தொழில் ஆரம்பிக்கும் போது கோட்டும் சூட்டும் போட்டிருந்தேன்
தொழில் முடிக்கும் போது கோவணத்தோடு நின்றேன்
நல்லவேளை அம்மணமாக அலையவில்லை

என்ன இருந்தாலும் அரசாங்கம் அரசாங்கம்தான்...
அது சரி அரசே! இந்தத் தொழில் ரகசியத்தை
ஏன் எனக்குப் பள்ளிக்கூடத்தில் சொல்லித்தரவில்லை..?


(யோவ்...பரிதி! நீவேற கட்டையை வெட்டிப் போட்டு விட்டாயே!  
அடுத்தத் தேர்தல்ல இதை யாராவது அறிவிக்கையாகச் சொல்லப் போகிறாங்க...
இந்தத் தொழில் ரகசியத்தைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்த்திடப் போகிறாங்க!)  


                         ........பரிதி.முத்துராசன் 
*******************************************************************

டாஸ்மாக்-பற்றி தங்கள் கருத்து....இது நம் நாட்டுக்கு தேவையா...?


*****************************************************************


இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து ....................?             
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1