google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சமர்- (ஹவுஸ்)புல்டா...உல்டா

Wednesday, January 23, 2013

சமர்- (ஹவுஸ்)புல்டா...உல்டா



இப்போதைக்கு விஸ்வரூபத்தைத் தவிர வேறு எந்தப் படத்துக்கும் போகக்கூடாது என்று இருந்த என் தவத்தைக் கலைக்க வந்தார் நீண்ட நாள் நண்பர் ஒருவர் (விஷால் ரசிகர்)கையில் சமர் பட டிக்கெட்டுடனும் தலையில் டாஸ்மாக் போதையுடனும்  ....
நான் எவ்வளவோ மறுத்தும் அவர் விடாப்பிடியாக அழைத்ததால் நானும் போனேன் (படத்துக்குத்தான்) .போகும் வழியில் சமர் போஸ்டர்...(அரங்கம் அதிரும் ஹவுஸ்புல் காட்சிகளுடன் பத்தாவது நாள்) கொஞ்சம் தெம்பு தந்தது

ஆனால் அரங்கில் நுழைந்ததும் (ஹவுஸ்)புல்டா...உல்டா என்பது தெரிந்தது  மொத்தமே பத்துபேர்தான் அரங்கில் இருந்தோம் ...மீதிபேர் எப்போது வருவாங்க...?

படமும் ஆரம்பித்தது...காட்டு மரம் வெட்டிக்  கடத்தும் கும்பலை பறந்து வந்து தாக்குகிறார் அருகில் இருந்த நண்பரோ துள்ளித் துள்ளி குதித்தார் அப்புறம்...அத்தோடு படத்தை முடித்திருந்தால்சமர் மிகப்பெரிய வெற்றிப் படம் ஆகியிருக்கும் தேசிய விருதும் கிடைத்திருக்கும்





சரி படத்தைப் பார்ப்போம் ...விஷாலின் காதலி வருகிறார் ..காதலுக்குக் கா- சொல்லிவிட்டு  வெளிநாடு போகிறார்..சோகத்திலிருக்கும் விஷாலுக்குக் காதலியிடமிருந்து கடிதமும் பறக்கும் சீட்டும் கூரியரில் வருகிறது ...அங்கே போன விசாலுக்கு எல்லாம் ஆச்சரியம் மிகப்பெரிய பணக்காரர்போல் மரியாதை புதுசா ஒரு காதலி திரிஷா ..அப்படி இப்படியினு ...
எதுவும் புரியாமல் விசாலுடன் சேர்ந்து நாமும் திரு...திரு-னு முழிக்கிறோம் கண்கள் பிதுங்க.....(இயக்குனர் திரு என்பதினாலா...?)



அருகிலிருந்த நண்பரைப் பார்த்தேன் அவரோ டாஸ்மாக்-புண்ணியத்தில் நன்றாகவே தூங்கிக்கொண்டிருந்தார் ...அடப்பாவி..! திரையிலோ அடிக்கடி DRINKING LIQUOR  IS INJURIOUS TO HEALTH என்று காட்டினார்கள் அதை  நண்பரும் பார்க்கட்டுமே என்று எழுப்பினேன் ..அவரோ கண் திறந்து பார்த்து விட்டு நாளைக்கு கதைச் சொல்லு என்று மீண்டும் தூங்கிவிட்டார் 

அப்போது திரையில் இரண்டு கிறுக்கு வில்லன்களைக் காட்டுகிறார்கள் அவர்கள் குழந்தையாக இருக்கும் போதே பந்தயம் கட்டுவதில் பங்குதாரர்களாம் அவர்களுக்கு மனிதர்களை வைத்து விளையாடுவது புது விளையாட்டாம் விஷால்,திரிஷா ...இவர்கள் விளையாட்டுக் காய்களாம் அவர்களுக்கு என்னவோ இந்த விளையாட்டு நன்றாக இருக்கு எனக்குத்தான் இது பைத்தியக்காரத்தனமாக இருக்கு

வழக்கம்போல் கதாநாயகன் அந்த இரண்டு வில்லன்களையும் அவர்களின் திரு..திரு..வழியில் சென்று முடித்துவிடுகிறார் விளையாட்டை ...படம் முடிந்தது

இது மிகப்பெரிய ஆக்சன் திரிலர்   படம் அதாவது பின்னாடி உள்ளது முன்னாடி இருந்தா....முன்னாடி உள்ளது பின்னாடி இருந்தா... கதையைத்தான் சொல்லுகிறேன்

படம் முடிந்ததும் அவசரத்தில் வெளியே ஓடிவந்துவிட்டேன் ..தூங்கிக்கொண்டிருந்த டாஸ்மாக் நண்பரை எழுப்பாமல்....மீண்டும் அரங்கத்திற்குச் சென்று  அவரை எழுப்பினேன் ..கோபித்துக்கொண்டார்.























என்ன ரொம்ப அறுக்கிறேனா...?இது ஒரு நல்ல (விளையாட்டு) படம் ..விளையாட்டை ரசிக்க வேண்டுமெனில் ..முதலில் நீங்கள் ஒரு டிக்கெட் எடுத்து இடைவேளைக்குப் பிறகு வரும் வில்லன்களின் கதையைப் பாருங்கள் ..அப்புறம் அடுத்த டிக்கெட்  எடுத்துப் படத்தை முதலில் இருந்து பாருங்கள் இந்த விளையாட்டு உங்களுக்குப் பிடிக்கும் 

என்ன இப்படி  படம் பார்க்கும் இந்த விளையாட்டு உங்களுக்கு சம்மதமா...?   பந்தயம் கட்டுவோமா?
    
                                          .....................................பரிதி.முத்துராசன்  
*****************************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து.........................? 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1