google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விஸ்வரூபமும் முஸ்லிம்கள் எதிர்ப்பும்-விளம்பரமா?

Wednesday, January 23, 2013

விஸ்வரூபமும் முஸ்லிம்கள் எதிர்ப்பும்-விளம்பரமா?



விஸ்வரூபம் - பெயருக்கு ஏற்ப மிகப்பெரிய (விஸ்வரூப)தொல்லையாக உள்ளது படம் எடுக்கும் உலக நாயகனுக்கும் படம் பார்க்க நினைக்கும் நமக்கும் 

முதலில் DTH-ல் படம் வெளியீடு என்று கமல் திரியைக் கொளுத்திப் போட்டாலும் போட்டார் திரையரங்கு உரிமையாளர்கள் வயிறு பற்றிக்கொண்டு எரிந்தது.பிறகு பழைய குருடி கதையாகத் திரையரங்க வெளியீடு என்றார்கள் ஆக எப்படியும் படம் பார்த்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த போது புதுக் கரடி விடுகிறார்கள்.....

விஸ்வரூபத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு என்று.இதில் வேடிக்கை என்ன வென்றால் படம் தயாரித்த உலகநாயகன் அப்படம் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவே பொறிக்கப்பட்ட அப்படம் என்கிறார் .அந்த அப்படத்தை உண்ட முஸ்லிம் மக்கள் அவரை நல்ல (சமையல்) கலைஞராகக் கொண்டாடுவார்கள் என்று சொன்னதோடு அல்லாமல் தனது இல்லத்தில் முஸ்லிம் அமைப்பு சார்த்தவர்களுக்குத் (திரை)விருந்து படைத்தார் 

எல்லோரும் போய் நன்றாக தின்று விட்டு இன்று சமையல் சரியில்லை என்று அஜீர்ண ஏப்பமிடுகிறார்கள் உண்மையில் நடந்தது என்ன...?

இதுவும் துப்பாக்கி படம் போல் விளம்பரமா?

நாளை உலக நாயகர் ஒரு மன்னிப்பு அறிவிக்கை விடுத்து அடுத்தப் படத்தில் முஸ்லிம் மக்களில் ஒருவனாகவோ அல்லது......

சரி..நமக்கு எதற்கு வம்பு.....? 
முன்பெல்லாம் சினிமா சமுதாயத்தை சீரழித்தது இப்போது சமுதாயம் சினிமாவைச் சீரழிக்கிறதா...? சந்திரபாபு மாதிரி ஒண்ணுமே புரியலே உலகத்திலே என்ற கதைதான் ....  

வேண்டுமெனில் ஓன்று செய்யலாம் 
இப்போது சினிமாவில் புகைக்கும் காட்சி மது அருந்தும் காட்சி வரும் போது ...எச்சரிக்கை வாசகங்கள் வருவது போல் 
மத சம்பந்தப்பட்ட காட்சிகள் வரும்போது .........
 
"இந்தப் படம் எந்த மதத்தையும் தாக்கியும் சார்ந்தும் எடுக்கப்பட்டது அல்ல"
 .............என்று வாசகம் போடலாமா....?

.                                                      .....................பரிதி.முத்துராசன்.

 *******************************************************************************
உங்கள் பார்வையில்.............

விஸ்வரூபம்-படத்துக்கு முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பு.....?




இக்கருத்துக்கணிப்பு ஒரு நாள் மட்டுமே   முடிவு தேதி-24/01/2013
 
********************************************************************************
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1