இன்று மாட்டுப்பொங்கல்!
சென்னை மாநகர் மத்தியில் வாழும் நான்
ஒரு மாட்டைக்கூட கண்ணில் காணவில்லை...
அன்று பள்ளிச் சிறுவனாக இருந்தப்போது வடுகை மாநகரில் (வடுகப்பட்டி கிராமத்தைஅப்போதே நாங்கள் பட்டியை நீக்கிவிட்டு பெருமையாக வடுகை மாநகர் என்றுதான் அழைப்போம்)
அது வராக நதி பாயும் பூமி! மழையில்லையேல் அது எப்போதும் வராத நதிதான் ஆனால் கமலை மாடுகளை வைத்து கிணற்றுப்பாசனம் உண்டு
அது அருகில் உள்ள வைகை அணை- நீர்தேக்கத்தின் புண்ணியம்.அருகில் உள்ள தாமரைக்குளமும் பாசனத்துக்கு கொஞ்சம் உதவும்.
அப்போதெல்லாம் உழவுக்கு எந்திரங்கள் வராத காலம்
மாடுகளை வைத்துத்தான் உழவு மற்றும் அனைத்து விவசாய வேலைகளையும் செய்யவேண்டும் அதனால் காளைமாடுகள் அங்கு நிறைய உண்டு.
மாட்டுப்பொங்கல் வந்துவிட்டால் ஊரே திருவிழாதான்
மாடுகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூச ஒரு கூட்டமே உண்டு
மாடுகள் எல்லாம் அரசியல் கட்சி வர்ணங்களில் அதிலும் கருப்பு-வெள்ளை-சிவப்பு என்று அ.தி.மு.க. மாடுகள் (அப்போது எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த காலம்) அதிகம் இருக்கும்
காலையில் ஆண்-பெண் வேறுபாடின்றி மாடுகளுக்கு பொங்கல் வைத்து பூஜை நடக்கும் மாலையில் ஜல்லிக்கட்டு நடக்கும் ஜல்லிக்கட்டு என்றதும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அல்ல..இது சிரிப்பு ஜல்லிக்கட்டு
இங்கே கலந்து கொள்ளும் காளைகள் பாவம் சோர்ந்து போய் நடக்க முடியாமல் தள்ளாடித்தான் வரும் அவைகள் ஜல்லிக்கட்டு காளைகள் அல்ல கமலைக்காளைகள் உழவுக்காளைகள்..பால்மாடுகளும் எருமைமாடுகளும் இளம்கன்றுகளும் கலந்துக்கொள்ளும்
இந்த ஜல்லிக்கட்டு ...கோயில் வாசலில் இருந்து அதன் உரிமையாளர் பின்தொடர மாடுகள் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வரும் ..பெரியவர்கள் (காளையர்கள்)யாரும் அதை அடக்க வரமாட்டார்கள் ..எங்களைப் போன்ற சிறுவர்கள் மட்டுமே அடக்க ஓடுவோம் ..அதுவும் மாட்டு வாலைப் பிடித்து..நான்கையிந்து குசும்பர்கள் ஓடுவோம்
இந்தஜல்லிக்கட்டு பரிசு என்ன தெரியுமா...?
சாட்டை அடி-மாட்டு உரிமையாளர் கோபத்துடன் சாட்டையால் விளாசுவார் மாட்டு வாலைப் பிடித்த என் போன்ற வாண்டுகளை..
என்னால் என்றும் மறக்கமுடியாதது இந்தச் சிரிப்பு ஜல்லிக்கட்டு!
........................................பரிதி.முத்துராசன்
**************************************************************************
thanks-YouTube-zeeshe100
****************************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து....?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |








