google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தமிழ் சினிமா- திறமையான நடிகர் யார்...?

Monday, January 21, 2013

தமிழ் சினிமா- திறமையான நடிகர் யார்...?


கோடிக்கணக்கான வான் நட்சத்திரங்களில் சில மட்டுமே ஜொலிப்பதை நம்மால் காணமுடிகிறது

அதேப்போன்றுதான் இன்றைய தமிழ் திரையுலகில்  நிறைய நடிகர்கள்(சினிமா நட்சத்திரங்கள்) அவர்களில் சிலர் மட்டுமே உச்சத்தில் உள்ளனர்.சிலர்  வந்தவேகத்தில் மின்மினி போல் காணாமல் போகின்றனர்சிலர்  அதிஸ்ட்டக்காற்றில் உச்சத்தில் ஒட்டிக்கொள்கின்றனர் சிலர் வாரிசு வழியில்  உயரத்தை அடைகிறார்கள்

சிலர் உழைப்பு அறிவு திறமை இந்தப் படிக்கட்டுகளில் பயணித்துச்  சிகரத்தை அடைகிறார்கள்



ரஜினிகாந்த்-சினிமா நட்சத்திரங்களில் மேம்பட்ட (SUPER STAR) நட்சத்திரமான இவர் வழி  நடிப்பில் தனிவழி (அரசியல் வாதிகளுக்கோ...? தலைவலி..!) சினிமா பயிற்சி  படித்தவர் அன்று பேருந்து நடத்துனராக  இன்று  திரைப்படத்துறையை  நடத்துபவராக....
 




கமலஹாசன்-தமிழ் திரையுலகில் ஒரு சகலாகல வல்லவர் உலக அளவில் பேசப்படும் உலக நாயகர்..பால்யவயதில் திரைப்பால் குடித்தவர் அதனாலேயே அவரது புதுச் சிந்தனைகள் அனைத்தும் விஸ்வரூபமாகத் தெரியும் அதுவே அவருக்குப் பலம் ரசிகர்களுக்குப் பழம் சிலருக்குப் பயம் 




விஜய்-தமிழ் திரையுலகின்  (இளைய) தளபதி  என்று இவரது ரசிகர்கள் கொண்டாடுவர்  போக்கிரி நடிப்பும் ஜாங்கிரி  சிரிப்பும் இவருக்கு கைவந்த கலை சினிமாத்துறையில் அன்றும் இன்றும் இயக்குனர் தந்தையால் இயக்கப்படும் பம்..பம்பரம் நடிப்பில் சில நேரம் சுறா..சில நேரம் நண்பன்





அஜித்-ரசிகர்களால் 'தல' என்று தலையில் தூக்கிவைத்து கொண்டாடப்படும் இவர் அமர்களமாக நடித்து முன்னுக்கு வந்தவர்  நடிப்பு இவருக்கு (மங்காத்தா)விளையாட்டு மாதிரி கார் ரேஸ் பிரியர் அதனால்தானோ இவருக்குக் வெற்றியும் தோல்வியும் சில நேரம் டாப் கியர்  சில நேரம் ரிவர்ஸ் கியர்



சூர்யா-இவர் ஆவேசமான நடிப்புக்கு சிங்கம்.அதிரடி நடிப்பை  காக்க..காக்க என்று காக்கவந்தவர்.தந்தையின் நடிப்பு வழிகாட்டுதல் ஆயினும் அவரைவிட நூறு அடி அதிகம் பாய்ந்தவர்



விக்ரம்-இவர் நடிப்பில் தூள்.சினிமாவில் கதாப்பாத்திரமாகவே மாறிவிடும் திறமை
 கதாப்பாத்திரத்தின் பெயரால் சீயான் என்று  அழைக்கப்படுகிறார்.நடிப்பு இவருக்குள்ளையே  ஒளிந்திருக்கும் அந்நியனாக..!
இவரைப் பார்வையற்றவராக நடிக்கச் சொன்னால் கண்களைப் பிடுங்கி வைத்து விட்டு நடித்து முடித்த பிறகு எடுத்து மாட்டிக்கொள்வார்....




கார்த்தி-இவரும்  தந்தை வழியில் திரைக்கு வந்தவர் இவருடைய முதல் படத்திலேயே அத்தனை பேர்களையும் அண்ணாந்து பார்க்கவைத்தவர் இன்றும் அவரிடம் அதே எதிர்பார்ப்பு எல்லோருக்கும் அதனாலே இந்தச் சிறுத்தையின் பாய்ச்சல் சிலநேரங்களில் சறுக்கிவிடுகிறது.






சிம்பு-இவர் நடிப்பில்  சிலம்பாட்டம் ஆடும் ஒஸ்தி நடிகர் தந்தையும் மகனும் பேச்சு நடிப்பு என்ற புதுயுத்தியில் பிரபலமானவர்கள்   நடிப்பிலும் கிசு கிசு-வெடிப்பிலும் (உதட்டுக் கடிப்பிலும்)  வல்லவர் இன்றைய காதல் இளவரசன்..அன்று Little Super Star...?








 ஸ்ரீநிவாசன்-அப்படியினா...? யாருக்கும் தெரியாது பவர் ஸ்டார் என்றாலே பளிச்னு சிரிப்பார்கள்.நடிப்பு ...?   அது சிரிப்பு. இவருக்கும் சினிமாத்துறைக்கும் சம்பந்தமில்லை  இவர்  லத்திகாவில்.கடித்த கடி ..சாரி அடித்த அடி நேற்றுவரை வலி ...இப்போது லட்டு கொடுத்துச் சரிகட்டிவிட்டார் இப்போது திரைவானில் பிரகாசமாக ஜொலிக்கும் நட்சத்திரம் இவரே ..

இன்னும் நிறைய நட்சத்திரங்கள் உண்டு. இந்தக் காலக்கட்டத்தில் பிரகாசிப்பவர்களையே நாம் கணக்கிட்டுள்ளோம் 

                 ................................பரிதி முத்துராசன் 
****************************************************** 
இவர்களில் 
உண்மையான திறமையால் ஜொலிக்கும்

நட்சத்திர நடிகர் யார்...?

 முடிவு தேதி-24/01/2013  
இந்தக் கருத்துக்கணிப்பு  இன்றைய சினிமா உலகின் நட்சத்திர நடிகர்களின் உண்மையான நிலவரம் அறியவே! 
விருப்பம் உள்ளவர்கள் வாக்களிக்கவும் வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி!
********************************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து.....?
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1