google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விஸ்வரூபம்-சில கேள்விகள்...?

Thursday, January 24, 2013

விஸ்வரூபம்-சில கேள்விகள்...?


ஒரு குறிப்பிட்ட மதத்தை இழிவுபடுத்துவதாகவும் மதவுணர்வை  புண்படுத்துவதாகவும் விஸ்வரூபம் என்ற மாபெரும் படத்தைத் தடைசெய்துள்ளது தமிழக அரசு 

சமுதாயத்தில் மதக்கலவரங்களைத் தடுக்கும்  உயர்ந்த நோக்கத்தில் அரசு இந்த நடவடிக்கைமேற்கொண்டுள்ளது 

ஆனால், திரைப்படத்துறையையே தனது உயிராகவும் மூச்சாகவும் வாழ்ந்துகொண்டிருக்கும்  கமலஹாசன் என்றகலைஞன் காயப்பட்டு நிற்பதைக் காணும்போது மனம் வேதனைப்படுகிறது.


தேசப்பத்தி உள்ள ஒரு முஸ்லீம் விஸ்வரூபம் படத்தைப் பார்த்தால் நிச்சயம் பெருமைப்படுவர்! 
  என்று கமலஹாசன் விளக்கம் அளித்துள்ளார் 

கலாச்சாரப் பயங்கரவாதம்தான் தடைசெய்யப்படவேண்டும் என்றும் தான் அரசியல் நோக்கோடு காயப்படுத்தப்படுவதாக வருந்துகிறார் 
மேல் முறையீடு செய்யவும் முடிவு செய்துள்ளார்  

ஆனால்  அவரும்  மதத்தைப் புண்படுத்தும் காட்சிகளை  நீக்கிவிட்டுப்  படம் வெளியிட  முன்வரவேண்டும். நமது கருத்துக்கணிப்பும் இஸ்லாமியர்களின் எதிர்ப்பு உண்மையானது விளம்பரத்துக்காக அல்ல என்ற நிலையே........... 

இன்று தமிழகத்தில் சர்வ வல்லமை கொண்ட அம்மா அவர்கள் இதில் தலையிட்டு நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புவோமாக!








































thanks-img-vishwaroopthefilm.com
எனக்கு நானே கேட்டுக்கொள்ளும் சில கேள்விகள்.............

* சினிமா திரைப்படம்தான் மதக்கலவரத்துக்குக் காரணமா....? அப்படியென்றால் மும்பாய் தாக்குதலுக்கு எந்தத் திரைப்படம் காரணமாக இருந்தது...?

*திரைப்படங்களில் மது அருந்தும் காட்சிகள் வரும்போது "குடி குடியைக்கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்" என்றும் 
புகைப்பிடிக்கும் காட்சிகள் வரும்போது  "SMOKING IS INJURIOUS TO HEALTH" என்றும் எச்சரிக்கை வாசகங்கள் வருவது போல் மதச் சம்பந்தப்பட்ட காட்சிகள் வரும்போதும் மற்றும் கற்பழிப்பு,கொலை,கொள்ளை காட்சிகள் வரும்போதும்  இ.பி.கோ.சட்டங்களையும் குற்றத்திற்கான தண்டனைகளையும் எச்சரிக்கை வாசகங்களாகத் திரையில் வெளியிடலாமா..?


*ஒரு குறிப்பிட்ட மதத்தை இழிவுப்படுத்தும் காட்சிகள் இருக்குமென்றால் அந்தத்  திரைப்படத்தை வெளியிட எப்படி இந்திய தணிக்கைத்துறை அனுமதி அளித்துள்ளது......?

*திரையரங்கங்களில் தடை செய்யப்படும் திரைப்படம் வலைதளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும்போது இந்த மதக்கலவரம் உண்டாகாதா....? அப்படியென்றால் திரையரங்கங்கள்தான் சமுதாயச் சீரழிவுக்குக் காரணமா...?

                                                              ............................பரிதி.முத்துராசன்  
******************************************************************************























விஸ்வரூபம் தடை செய்யப்பட்டது நியாயமா....?



>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Kamal Haasan Talks About Vishwaroopam Being Banned

 thanks-YouTube-by filmcourage
*******************************************************************************
WARNING-THIS POST IS NOT AGAINST OR  SUPPORT TO ANY GOVT. OR RELIGION OR ACTOR 
எச்சரிக்கை-இப்பதிவு அரசாங்கத்தின் முடிவுக்கும் எந்த மதத்திற்கும் எந்த நடிகருக்கும் ஆதரவாகவோ எதிராகவோ வெளியிடப்படவில்லை!  
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இப்பதிவு  பற்றிய தங்கள் கருத்து....?
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1