google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சில ஹைடெக் கவிதைகள்!

Monday, February 11, 2013

சில ஹைடெக் கவிதைகள்!



பகுத்தறிவு-

பிள்ளையாருக்கு எறிந்த சிதர்தேங்காய்
அருகிலிருந்த பெரியார்  சிலை காலடியில்....
அதை எடுத்து மண்ணைத் துடைத்து....
அந்த ஆத்திகரிடமே கொடுத்தார் அவரும்.  
*****************************************************

 கடல்-

இரண்டுமணிநேரமாய் சாத்தானின் கூக்குரல்
மரணக்கடலின் கொடூர அலைகள்
அத்தனையும் முடிந்தது 
கடல் வற்றிப்போனதோ?....திரையரங்கில்..
***************************************************

விஸ்வரூபம்-

சும்மா கிடந்த சங்கை
ஊதி கெடுத்தான் ஆண்டி...!
அப்படியினா....?
அமைதியை அமளியாக்குவதா...?
ஆயிரம் அர்த்தங்கள் உண்டு 
***************************************************

 என் வலைப்பதிவு-

அவ்வப்போது....புயலின் வருகை
சிலநேரங்களில் வாசிப்போருக்கு சேதாரம்
சிலநேரங்களில் நேசிப்போருக்கு சேதாரம்
எல்லா நேரங்களிலும் 
எழுதும் எனக்கு  சேதாரம் 
******************************************************

அம்மா-

கால்தடுக்கி கீழே விழும்போதும் 
அந்த கட்சிப்பிரமுகர்.......... 
அ..ம்..மா என்றுதான் அலறினார் 
அம்மாடா....
பிழைத்துக்கொண்டது அவர் பதவி! 

*************************************************

 ஹைடெக் கவிதை-

ஹைக்கூ கவிதை தெரியும்
இஃது என்ன புதுசா
ஹைடெக் கவிதை...?
காகிதத்தில் எழுதினால் ஹைக்கூ
கணனியில் எழுதியதால் ஹைடெக்!

.........................பரிதி.முத்துராசன் 
*****************************************************
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1