google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: துப்பாக்கி-விஸ்வரூபம் யதார்த்தமா...?ஒரு அலசல்

Monday, February 11, 2013

துப்பாக்கி-விஸ்வரூபம் யதார்த்தமா...?ஒரு அலசல்


எத்தனையோ திரைப்படங்கள் இந்தச் சமுதாயத்தில் அவலங்களை விதைத்துச் சென்றுள்ளன நாங்கள் மட்டும்தான் உன் கண்ணுக்கு தெரிகிறோமா?என்று கேட்கும் என் உயிரிலும் மேலான கமல் ரசிகர்களே!விஜய் ரசிகர்களே!  சமுதாயத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் உங்கள் நாயகர்கள் அவர்கள் அறியாமல் செய்யும் சிறு தவறுகூட மிகப்பெரிய கேடு விளைவிக்கும்


 சினிமா ரியலிசம் என்பது இயற்கை வழுவாச் சித்திரிப்பு ஆனால் அதை வெர்னர் ஹெர்ஸாக் வெறுமனே ஒரு மாயை..! என்கிறார் (Cinematic realism is neither a genre nor a movement, and it has neither rigid formal criteria nor specific subject matter. But does this mean that realism is simply an illusion, and that, as Werner Herzog has declared: "the so called Cinéma Vérité iśrité?".................Realism, at the very least, has been a productive illusion..........thanks-.filmreference.com)

திரைப்பட வரலாற்றில், ரியலிசம் திரைப்படம் இரண்டு வேறுபட்ட  அணுகுமுறைகள்கொண்டது. 

முதல்அணுகுமுறை-கதாப்பாத்திரங்களாலும்,நம்பகத்தன்மை நிகழ்வுகள் ஒரு படத்திற்கு  உண்மை போன்ற தோற்றம் தருவது.   

இரண்டாவது அணுகுமுறை- கிராபிக்ஸ் புதிய தொழிநுட்பங்கள் ஒலி-ஒளி வடிவங்கள்..போன்றவைகளால் உண்மையைக் கேமராவின் இயந்திரத்தனத்தால் பிரதிபலிக்கச் செய்வது.
பெரும்பாலும் ஹோலிவுட் திரைப்படங்கள் இந்த இரண்டில் ஒன்றை பின்பற்றுகின்றன 


டைடானிக்-திரைப்படம் அந்தக் காலகட்டத்தில் மேற்கத்திய நாடுகளில் இருந்த பொருளாதார(பிரபுக்கள் மற்றும் லேபர்கள்) வேறுபாடு உண்மை நிகழ்ச்சியில் காதலை கற்பனையாகக் கலந்து வெளிவந்தது.அந்த கப்பல் மூழ்கிய காலகட்டத்துக்கும் படமாக வெளிவந்த காலகட்டத்துக்கும் நிறைய மாற்றங்கள் இருந்தன.

ஜுராசிக் பார்க்-திரைப்படம் எந்தக் காலத்திலையோ இருந்ததாக நம்பப்படும் டைனோசர்கள் இன்றும் ஒரு காட்டில் இருப்பதாக யதார்த்தமாகக் கிராபிக்ஸ் உதவியுடன் வெளிவந்தது 


அவதார்-திரைப்படம் ஒர் இனத்தின் அழிவை முழுக்க அனிமேசன் உதவியுடன் வேற்றுக் கிரகத்தில் நடப்பதுபோல் காட்டப்பட்டது 
இத்தகைய திரைப்படங்களால் மேற்கத்திய நாடுகளில் எந்தப் பாதிப்பும் இல்லை 

அனால் எல்லோராலும் பாராட்டப்பட்ட அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்..போன்ற நடிகர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த தவறு மிக வல்லவர்களாக நடித்து ...Predator,Protector,True and Lies...போன்ற திரைப்படங்களில் வன்முறைகாட்சிகள்,கொலைவெறி தாக்குதல்கள்,துப்பாக்கி கலாச்சாரம்....இன்று மேற்கத்திய நாடுகளில் சமுதாயத்தில் ஒரு பள்ளியில் பல பச்சிளம் குழந்தைகள் பலியானது..ஒரு திரையரங்கில் பலர் துப்பாக்கியால் சுடப்பட்டுச் செத்தது....பல்வேறு அவலங்களுக்குக் காரணமாக இருக்கிறது 


ஆனால் நாட்டில் நடந்ததைதானே திரையில் காட்டுகிறோம் அதன் பெயர் யதார்த்தம் என்று இப்போது தமிழ் திரைப்படங்களும் செய்கின்றன 

முதலில் துப்பாக்கி திரைப்படத்துக்கு வருவோம் 
தேசப்பற்றுள்ள இராணுவ வீரன் மும்பாயில் நடக்க இருந்த குண்டு வெடிப்புகளைத் தடுத்து தீவிர வாதிகளை ஒழித்துக்கட்டும் கதை.ஆனால் முருகதாஸ் யதார்த்தம் என்று சொல்லி சிலகாட்சிகள் நடந்ததாக...அதிலும் ஒரு பெண்ணைத் தீவிரவாதிகள் கழுத்தை  அருக்கப்போகும் காட்சி அனால் அவள் தப்பித்துக்கொள்கிறாள்...கதாநாயகன் காப்பாற்றிவிடுகிறார்
தேவையில்லாத காட்சிகள்..வீம்புக்காக வைக்கப்படும் காட்சிகள் கேட்டால் யதார்த்தம் என்பது.....படை வீரர்கள் போல ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் நடிகர் விஜய் போன்றவர்களை நடிக்க வைத்து அவர்களுக்கும் கெட்ட பெயர்... 

அடுத்ததாக விஸ்வரூபம்-
இதுவும் தேசப்பற்று உள்ள இந்திய உளவாளி அமெரிக்காவை காக்க தாலிபான் தீவிரவாதிகள் கூட்டத்தில் சேர்ந்து அவர்கள் ரகசிய திட்டத்தை (டர்டி பாம்) முறியடிக்கும் கதை இயக்குனரும் கதாநாயகனுமான கமலஹாசன் உலகில் நடந்த தீவிரவாத காட்சிகளைத் தினமும் செய்திகளில் பார்ப்பதை காட்டுவதாக....ஒரு அமெரிக்கரின் கழுத்தை அறுக்கும் காட்சி...தாய் கதற கதற மகனை  பொது இடத்தில் தூக்கிலிடும் காட்சி...இப்படி நிறைய யதார்த்தங்களைக் காட்டுகிறார் 

ஒருவகையில் துப்பாக்கியின் துப்பாக்கி கலாச்சாரம் விஸ்வரூபத்தைவிட மிக குறைவு அதே நேரத்தில் இந்தியாவில் நடந்த வன்முறையை நாசுக்காக எடுத்து காட்டும் படம்  
ஆனால் விஸ்வரூபம் ஆப்கான் தாலிபான் தீவிரவாதத்தை இந்தியாவில் காட்டவேண்டிய அவசியமென்ன..?


இந்திய அரசாங்க தணிக்கைத்துறை அனுமதி கொடுத்து விட்டது இடையில் நீ யாரு இப்படி எழுத..? என்று கேட்பவர்களே! நீங்கள் ஒன்றை மறந்து விடக்கூடாது நீங்கள் வாழ்வது...........
 குடி குடியைக் கெடுக்கும். என்று சொல்லிக்கொண்டே மதுக்கடைகளை அரசாங்கமே நடத்தும் நாடு இது.
இவர்களுக்கு  குற்றங்களை   தடுக்கத்தெரியாது. செத்தவனுக்கு நிவாரணம் தருவார்கள்.குற்றம் செய்தவனுக்கு தண்டனை தருவார்கள்


இந்தியாவில் தீவிரவாதிகள் இல்லையா? இந்தியாவில் சாதி வேற்றுமைகள் இல்லையா..?.
ஒரு பகுத்தறிவுவாதியாகக் காட்டிக்கொள்ளும் கமலஹாசன் நேரடியாகவே அவைகளைச் சித்தரித்திருக்களாமே!
இவர் எந்த ஊர் பகுத்தறிவுவாதியோ?ஈரோட்டு கிழவர் இந்த வன்முறை பகுத்தறிவை சொல்லித்தரவில்லையே!

ஒரு வித்தியாசம் செய்தி தொலைக்காட்சிகள் இலவசமாகக் காட்டும் இன்டர்நெட்டில் இலவசமாகப் பார்க்கலாம் ..இந்த கன்றாவிகளை நாம் காசு கொடுத்து மந்தையில் அடையும் ஆடு மாடுகள் போல்  திரையரங்குகளில் காணவேண்டுமா?

இந்த இரண்டு படங்கள் மட்டும்தான் இப்படியா? என்றால் இல்லை இப்போது தமிழ் திரையுலகில் ஒரு கூட்டமே இப்படி அலைகிறார்கள் இதற்குப் பெரிய நடிகர்களும் உடந்தையாகிறார்கள்....இதற்கு அலெக்ஸ் பாண்டியன் போன்ற மொக்கைகள் மேல்..........

ஆனால் இவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள் இவர்களால் பவர் ஸ்டார்...போன்ற நடிகர்கள் உச்சத்துக்கு வருவார்கள் நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்,அட்டைக்கத்தி,...இப்படி நிறையத் திரைப்படங்கள் எந்த எதிர்பார்ப்பும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் வெற்றிபெறும் 

யதார்த்தம் என்ற பெயரில் சொந்த சிந்தனை இல்லாமல் இப்படிப் படம் எடுப்பவர்களைத் திரையுலகத் தீவிரவாதிகள் என்று சொல்லலாமா?




















ணத்துக்காகப் பெரிய நடிகர்கள் இயக்குனர்கள் இப்படிச் சோரம் போவதை யதார்த்தம் என்றும் உலகத்தரம் என்றும் சொல்லும் இவர்களைக் கலை வியாபாரிகள் (நாகரிகமாக)  என்று சொல்லலாமா?

அன்று ஒருதிரைப் படத்தைப் பார்த்துக் கொலைகள் செய்தேன் என்று வாக்குமூலம் கொடுத்த ஜெயபிரகாஷ் போன்று இன்னும் எத்தனை ஜெயபிரகாஷ்களை இந்த கலைத்தீவிரவாதிகள் உருவாக்கப் போகிறார்களோ........?இல்லையேல் உருவாக்கி வைத்திருக்கிறார்களோ?

உலகநாயகரே!உமக்கு ஒர் உண்மை தெரியுமா?உம்மை ஆதரிப்பவர்கள் நாளை நீவீர் அரசியலுக்கு வந்தால் பதவிகிடைக்கும் என்று நினைக்கும் உமது தீவிர ரசிகர்கள் சிலர்....தங்கள் வயிற்றை நிறைக்க நினைக்கும்  தொலைக்காட்சி  ஊடகங்கள் சில...உண்மையை மறைத்து சுயநலமாக எழுத்து உலா வரும்   பத்திரிகைகள்  சில .... அவர்கள் இன்று உமது நெற்றிக்கு குங்குமம் இடுவார்கள் நாளை என்னசெயவார்கள் அஃது அவர்களுக்கே தெரியாது 


                                                               ...................................பரிதி.முத்துராசன்.

  *********************************************************************


இப்பதிவு யாருக்கும் சாதகமானதோ எதிர்ப்பானதோ அல்ல பதிவுவாசிகள் எனக்கு அண்டா குண்டாவில் பிரியாணி அனுப்ப வேண்டாம்  மருத்துவர்கள் எனக்கு  கொழுப்பு(colesterol) அதிகம் என்று சொல்லியிருப்பதால்...
விரைவில் வருகிறது .......நீங்களே தீர்மானியுங்கள்  

விஸ்வரூபம் வெற்றிப்படமா?கருத்துக்கணிப்பு   
.....................................................................................................................................................

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1