google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இப்படியும் காதல் செய்யலாமே...?

Thursday, February 14, 2013

இப்படியும் காதல் செய்யலாமே...?



இப்படியும் காதல் செய்யலாமே...?
காதலர்களே! காதலர்களே!
அய்யன் வள்ளுவனின் 
காமத்துப்பாலை 
கரைத்துக் குடித்துவிட்டு....

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.


வீம்பையும் வம்பையும் 
விலக்கி வைத்துவிட்டு..
தெம்பாகக் காதல் செய்யுங்கள் 
   
இப்படியும் காதல் செய்யலாமே...? 
உங்கள் காதல் 
இலக்கியக் காதலாகட்டும்!.





 






















thanks-img-deviantart.net
இப்படியும் காதல் செய்யலாமே...? 
காதலர்களே! காதலர்களே!
கம்பன் காட்டிய வழியில்...

அண்ணலும் நோக்கினான்,
அவளும் நோக்கினாள்! 
 
 விரசமில்லா காதல் 
விபரிதமில்லா காதலாகும் 

இப்படியும் காதல் செய்யலாமே...?
உங்கள் காதல் 
தெய்வீக காதலாகட்டும்!

யோவ்...பரிதி!....

எப்படியும் காதல் செய்யலாம்...?
அதுவென்ன...
இப்படியும் காதல் செய்யலாமே...? என்று.

எழுத்தாணி காலத்தில் உள்ள 
காதலைச் சொல்லி ஏய்க்காதே..!
இப்போது கணணிக்காலம் 
நேரில் பார்க்காமலேயே 
இன்டர்நெட்டில் காதலிப்போம்...

நோக்கினானோ? நோக்கினாளோ? 
NOKIA-வை சொடிக்கினாலே போதும் 
காதல் நெருப்பு பற்றிக்கிட்டு எரியும்.


இன்று-காதலர் தினம்
வந்தாலும் வந்துச்சு...
உன்னைப்போல் கிறுக்கர்கள்
எதையாவது கிறுக்கி...
கிறுக்கர் தினம் ஆகிப்போச்சு!)


.....................பரிதி.முத்துராசன் 

***********************************************

இன்றைய  காதலர் தினம்.........-Google doodle: வழங்கிய விலங்குகளின் காதல் வகைகளை தெரிந்துகொள்ளலாம்  

                             thanks- YouTube-SimonRueger


thanks-SoundCloud- by Pooja Chandramouleeswaran
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1