google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மிர்ச்சி-(தெலுங்கு)காதல் அதிரடி திரைப்படம்

Thursday, February 14, 2013

மிர்ச்சி-(தெலுங்கு)காதல் அதிரடி திரைப்படம்


நான் எத்தனையோ தெலுங்கு திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன் அவைகளில் மிர்ச்சி திரைப்படம் எந்த வித்தியாசமும் இல்லை
(என்ன...மக்கா...நீங்க முறைப்பது தெரிகிறது ..இவனுஎழுதும் தமிழ் படம் விமர்சனமே சொதப்பல்... இதிலவேற ...தெலுங்குக்கு போயிட்டானா...?)




நான் என்ன செய்வது வரிசையாக நான்கு தமிழ் திரைப்படங்கள் பார்த்து வாழ்க்கையே வெறுத்துவிட்டது அதனால் இதற்குப் போகவேண்டியது ஆனது போனதுக்கு ஒன்றும் நஷ்டமும் கஷ்டமும் இல்லை 

நிறையத் தமிழ் படங்களில் பார்த்த தெலுங்கு நடிகர்கள் அப்புறம் நம்ம சத்தியராஜ் இருக்காக...நம்ம நதியா இருக்காக....கவர்ச்சிக்கு நம்ம ரிச்சா..இருக்காக ..காதல் ஆட்டத்துக்கு நம்ம அனுஷ்கா...இருக்காக    ஆக...ஒரு தமிழ்படம் பார்க்கும் உணர்வு












 




















thanks-image-gulte.com
படம்-மிர்ச்சி
வகை-அதிரடி,குடும்ப(காதல்)படம்
நடிகர்கள்-நடிகர்கள்:Prabhas,அனுஷ்கா, ரிச்சா, சத்ய ராஜ், சம்பத் ராஜ், Subbraju, அஜய், Brahmanandam, சத்யம் ராஜேஷ், ரகு Karumanchi, Nagineedu, Benerjee, சீனிவாஸ் ரெட்டி, ஆதித்யா மேனன், Raghubabu, Nadiya, ஹேமா,..etc
இசை- தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு: Madhie
பாடல்: ராம Jogaiah சாஸ்திரி
கலை: பிரகாஷ் AS
கதை - திரைக்கதை - இயக்கம்: Koratala சிவா
தயாரிப்பாளர்கள்: வம்சி - பிரமோத்
 









 





















yhanks-img-.mirchi9.com

கதை-கதாநாயகன் ஜெய் (Prabhas) மானசா(ரிச்சா)மீது காதல் கொள்கிறார்  அவள் குடும்பப் பின்னணியோ Palnadu அருகில் கொடூரமான கொலைகாரர்கள் நிறைந்த கூட்டம் ஆனால் ஜெய் அமைதியையும் காதலையும் விரும்புபவர் 

அதனால் அவர் மனசாவின் ஊருக்கு சென்று அன்பைத் தவிர உலகில் அடி தடி எல்லாம் வேலைக்கு ஆகாது என்று பல அடி தடிகள்...? செய்து எல்லோரையும் திருத்துகிறார்...


விஸ்வரூபம் போல் பிளாஸ்பேக் உள்ள படம் அது துப்பாக்கி கலாச்சாரம் இஃது ஆயுத கலாச்சாரம்..வெட்டு குத்துக் காட்சிகள் நிறைய ஆனால் அவைகள் விஸ்வரூபம் போல் முக்கியத்துவமாகக் காட்டப்படவில்லை அதனால் அவைகள் அப்படியொன்றும் கொடூரமாகத் தெரியவில்லை தணிக்கை துறையின் A-முத்திரை படம்தான்  சொல்லப்போனால்...

இது ஒரு காதல் தீவிரவாதியின் அஹிம்ஸா படம்ம்..ம்..யார் பேசினாலும் வீர வசனமாகவே இருக்கு...பாடல்களும் சரி பேசுவதும் சரி  நம்ம பாரதி சொன்னதுபோல் சுந்தரத்தெலுங்கு கேட்பதற்குச் சுகமாக இருக்கு...Prabhas-ன் அதிரடி சண்டை நம்ம அலெக்ஸ்பாண்டியனை விட நூறு மடங்கு....ஒர அருவா வீச்சுக்கே   பத்து வண்டிகள் தூக்கி வீசப்படும்..ஒரு குத்துக்கே அயிம்பது பேர் அடிபட்டு விழுவார்கள்...செம ஜாலியா இருக்கும்   

நிறையச் சஸ்பென்ஸ் இருக்கு சத்தியராஜ்-நதியா-Prabhas இவர்களுக்குள் உள்ள உறவு....?சத்தியராஜ் ஏன் படம் முழுவதும் (எப்போதாவது ஓன்று இரண்டு வார்த்தைகள் தவிர) எதுவும் பேசாமல் இருக்கிறார்...? (என்னைப்போல் அவருக்கும் தெலுங்கு பேசத் தெரியாதோ...?) அப்புறம் அவர் ஏன் படம் முழுவதும் திருத் திரு வென்று முழிக்கிறார்...?(திரையரங்கில் நான் முழித்துக்கொண்டிருந்தது போல்...?) இப்படி நிறையக் கேள்விக்கு விடைகள் வெள்ளித்திரையில்....

முக்கியமாக ஓன்று...ரிச்சாவை விட்டு விட்டு ஜெய் அனுஷ்காவுடன் இரண்டு டூயட் பாடுகிறார் அருமையோ...அருமை நம் தமிழ் படங்களில் இல்லாத அனுஷ்காவின் ஆட்டம் ...

ஒளிப்பதிவு அருமை..அதிலும் பாடல் காட்சிகள் சண்டை காட்சிகள் காண்பதற்கு நன்று அப்புறம் அந்தக் கிராமத்து பங்களா வீடு அரண்மனை போல் காட்டப்படுகிறது 

இசை-தேவி ஸ்ரீ பிரசாத்...பாடல்கள் கேட்கும்படியாக இருக்கின்றன...வெட்டு குத்துக் காட்சிகளில் அதற்கே உரிய கொடூர ஒலி...ஆக மொத்தத்தில் படம் சமீபத்தில் திரைக்கு வந்த நம்ம தமிழ் படங்களை விட அருமை....அதிரடி சண்டைகள் அழகான 


                                        thanks-YouTube-telugufilmnagar



விரசமில்லாத காதல் பார்க்க நினைப்பவர்கள் பார்க்க வேண்டிய டோல்லிவுட் வெற்றிப்படம்...படம் பாருங்கள்..உங்கள் ஊர் திரையரங்குக்கு வந்தால்....இல்லையேல் காத்திருங்கள்...........

இன்னும் சில நாட்களில்  நம்ம தமிழ் சினிமா அதிரடி நாயகர்கள் எப்படியும் தமிழில் (COPY AND PASTE) டப்புவாங்க....தமிழிலே பார்க்கலாம்  

இளைய தளபதி விஜய்-க்கு ஏற்ற படம்..கில்லி-II....?... பின்னு பின்னுனு பின்னுவார்  

அப்பாடா....நன்றி..இப்பதிவை இவ்வளவு நேரம் பொறுமையாக வாசித்த என் அன்பு பதிவுவா(நே)சிகளே.... மீண்டும் நன்றி   

                   ....................................பரிதி.முத்துராசன்  
 

thanks-SoundCloud

  ********************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து....?
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1