google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நடிகர்கள் பஞ்சமா? நடிப்பு பஞ்சமா?

Tuesday, February 19, 2013

நடிகர்கள் பஞ்சமா? நடிப்பு பஞ்சமா?



ஏல..............அறிவுச்செல்வா!
நாட்டுல சோத்துப்பஞ்சம் உண்டு
குடி தண்ணிப்பஞ்சம் உண்டு
(டாஸ்மாக் குடி தண்ணீரைச் சொல்லல) 
இப்ப என்னல புதுசா நடிகர்கள் பஞ்சம்.....?


போன வருஷம் 140 படம் வந்துச்சாம்ல
இந்த வருஷம் 200 படம் வரப்போகுதாம்...
நட்சத்திர நடிகர்கள் நாலு பேரும் 
வருஷத்துக்கு ஒண்ணு இரண்டு நடிக்க...

பெரிய நடிகர்களெல்லாம்....
வருஷத்துக்கு நாலு படம் நடிக்க...
புது நடிகர்கள் எல்லாம் புக்காகிப் போக..
நடிக்கிறதுக்கு  ஆம்புளப் புள்ளகளே இல்லையாம்ல?


பொம்பளப் புள்ளைகளுக்குப் பஞ்சமில்லையாம்ல...
அவுகள கேரளா-ஆந்திரா-மும்பாய்-னு
எங்கயாவது புடிச்சிட்டு வந்து....
அரையும் குறையுமா ஆடயக்கட்டி...
ஆட்டம் காட்டியே படத்த முடிச்சிடுறாங்கல



ஏல ...............அறிவுச்செல்வா!
இவிங்க என்னத்தல நடிக்கிறாங்க 
நடிகர் திலகம் மாதிரி நவரசம் காட்டுறாங்களா?
இல்ல புரட்சி தலைவர் மாதிரி 
டிஸ்சும் டிஸ்சும் சண்டை போடுறாங்களா? 


இப்பம் இருக்கிறவங்க கையில 
கத்தியும் துப்பாக்கியும்தான் இருக்கு 
ஒன்னு சதக் சதக்-னு  குத்துறாங்க 
இல்ல டமில் டுமில்-னு சுடுறாங்க
இதெல்லாம் ஒரு நடிப்பால...? 
இதுக்கு நீயும் நானும் நடிக்கப் போகலாம்ல...?


இல்லாக்காட்டி ஒன்னு பண்ணலாம்ல...
அவதார்-மிக்கி மௌஸ் மாதிரி
அம்புட்டு போரையும் கிராபிக்ஸ்ல
அலய  விட்டுட வேண்டியதுதானல... 


(அண்ணேன்...
அவியிங்க அழுவினியாட்டம் ஆடுறாங்க 
இங்க நடிகர்கள் பஞ்சம் இல்லை...அண்ணேன் 
இங்க இருக்கிறது  நடிப்புப் பஞ்சம்..
வில்லங்கரூபத்தில படம் பண்ணியே
இவியிங்க பணத்த அள்ளிப்புடுறாங்க...)


   ..................................பரிதி.முத்துராசன்

****************************************************************************
காணொளி-
என்றும் மனதைக் கொள்ளைக் கொள்ளும் நடிப்பும் வசனமும் 
                                              thanks-YouTube-kingsasii

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1