google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வனயுத்தம்-திரைப்படமா...?

Wednesday, February 20, 2013

வனயுத்தம்-திரைப்படமா...?


வனயுத்தம்-
10  வருடங்களாக இயக்குனர் ரமேஷ் அவர்கள் ஆய்வு செய்து காட்டுக்குளிருந்து நாட்டைக் கலங்க வைத்த வீரப்பன் பற்றிய இப்படம் பெயருக்கு ஏற்ப யுத்தம்-வீரப்பனுக்கும் காவல் உயர் அதிகாரி விஜயகுமார் IPS-க்கும் அடர்ந்த வனத்தில் நடந்த கடைசி யுத்தம்...?   
ஆனால்,படத்தைப் பார்த்தால் அப்படி எதுவும் தெரியவில்லையே! வனதந்திரம் என்று அழைக்கலாம். இராமாயணத்தில் ராமர் மறைந்திருந்து வாலியை வதம் செய்தது போல் காவல் உயர அதிகாரி (கண் நோய் பாதிக்கப்பட்ட) வீரப்பனை தந்திரமாக ஆம்புலன்ஸ் வாகனத்துக்குள் வரவழைத்துச் சாகடிப்பது எந்த வகை யுத்தம் என்று தெரியவில்லை.



2000 -க்கும் மேல் யானைகள் 162 வனத்துறை உழியர்கள்-காவலர்கள் போன்ற கொடூரங்களைச் செய்தாக சொல்லப்படும் வீரப்பன் அனைத்தும்  நேருக்கு நேராக செய்யவில்லை அவன் செய்த கொலைகள் அத்தனையும் தந்திரமாகவே செய்தான் ..அதே வழியில் காவல் உயர் அதிகாரியும் தந்திரமாக செயல் படுவதும் நியாயமே!


வீரப்பனாக நடிகர் கிஷோரும்  காவல் உயர் அதிகாரியாக ACTION KING அர்ஜுனும் நல்ல தேர்வு..........ஆனால் அர்ஜுனுக்கு MAP-பார்க்கும் ACTION  மட்டுமே ....கடைசியில் கூட்டத்தோடு கூட்டமாக ஒளிந்திருந்து சுடுகிறார்..?

இயக்குனர் ரமேஷ் இத்திரைப்படம் எடுத்து முடிப்பதற்குள் பட்ட தடுமாற்றங்கள் அத்தனையும் அவரது காட்சி அமைப்பு-கதை சொல்லும் விதம் போன்றவற்றில் காட்டிக்கொடுக்கிறது.


இப்படிப்பட்ட படம் எடுப்பதில் கதையில் எந்த  கிரியேட்டிவிட்டியும் இல்லை இப்போதைய  காலக்கட்டத்தில் நடந்த உண்மைகள் என்றும் யதார்த்தம் என்றும் விபரீதரூபம் காட்டுவதை விட...
டாக்குமென்ட்ரியாகவும் இல்லாமல் சினிமாத்தனங்களும் இல்லாமல்....இப்படி தட்டு தடுமாறி படம் எடுப்பது மேல்...



இப்போது எனக்கு இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தானின் அருமையும் அவர் எடுத்த வெற்றிப்படம் சீவலப்பேரி பாண்டி படமும் ஞாபகம் வருகிறது ..அடடா..நெப்போலியன்-நிழல்கள் ரவி-சரண்யா நடிப்பும் கண்முன் வருகிறது


                                              thanks-YouTube-Smartguyzful



இப்போதெல்லாம்
 தமிழ் சினிமாத்துறை திரைப்படங்கள் என்ற பெயரில்   பணம்புடுங்கும் கொள்ளைக்காரக் கூட்டம்  
திரையரங்குகள் டாஸ்மாக் கடைகள் போன்று விற்பனைக் கூடங்களாகிவிட்டன
மீண்டும் சினிமா பயிற்சி கல்லூரியிலிருந்து பயிற்சி பெற்ற புது இயக்குனர்கள் கூட்டம் வந்தாலொழிய தமிழ் சினிமாவின் தலைவிதி மாறாது

இல்லையேல் மத்திய அரசு அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் (எங்கே நாளொரு ஊழலில் அவர்களே தலையைச் சொரிந்து கொண்டிருக்கிறார்கள்) 


வீரப்பனைப் பற்றி வந்த செய்திகள் அன்றும் மர்மமாக இருந்தது.வீரப்பனைப் பற்றி இன்று வந்த வனயுத்தம் படமும் எந்தத் தெளிவும் சொல்லாதது ஏமாற்றமே   



இஃது அம்மாவின்  கடந்த ஆட்சியில் நடந்த வீர தீர சாதனையை இப்போது எடுத்துக்காட்டும் படம். இன்னும் கொஞ்சம் மாற்றம் செய்து இலவசமாகவே அம்மாவின் தொலைக்காட்சியில்  போட்டிருக்கலாம் 


அடுத்து தலைவர் ஆட்சி வந்தால்....இதே வீரப்பன் கதை இன்னொரு  ரூபத்திலும் வரலாம் ஏனென்றால் வீரப்பனுக்குப் பொது மன்னிப்பு பற்றி அவரது ஆட்சியில்தான் நிறையப் பேசப்பட்டது.... 
இப்போதுகூட நாலு பேர்கள் தூக்கு கயிறு எதிர்நோக்கி.... இந்தப் படத்தில் அந்தக் கண்ணிவெடியில் காவலர்கள் கொள்ளப்படும் காட்சி அடிக்கடி வருகிறது உண்மை என்னவென்று தெரியாத நிலையில்...இதற்கு மேலும் இப்பதிவு தொடர விருப்பமில்லை...

எல்லாம் அந்த (அன்று)ஆண்டவருக்கும் (இன்று)ஆளுபவருக்கும்தான் வெளிச்சம்  (நான் கடவுளைச் சொல்லுகிறேன் ..நீங்க வேறு யாரையாவது நினைத்துக்கொள்ளாதீர்கள்) 

                                                                  .........................பரிதி.முத்துராசன்

*******************************************************
சில விமர்சன கீச்சுக்கள்.................... 

வசனம்-அஜயன் பாலாவாம்.மெகாசீரியல் வசனங்களே தேவலாம்.ஒருவேளை Docu Dramaன்னா இப்டிதான் சவசவன்னு எழுதணுமோ? #வனயுத்தம்
வனயுத்தம் படத்தில் வீரப்பன் பற்றிய காட்சிகளை நீக்கி விட்டு திரையிடலாம் - நீதிமன்ற உத்தரவு #வெறும் டைட்டில் மட்டுமா?!
வீரப்பன் கெட்டவன். கெட்டவர்களின் கொட்டத்தை அம்மா அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கும். ‘வனயுத்தம்’ சொல்லும் செய்தி.

முத்துலட்சுமிக்கு ரூ 25 லட்சம் நஷ்டஈடு - வனயுத்தம் இயக்குநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! #டோட்டல் வசூலே அம்புட்டு வராதேய்யா!
அர்ஜுன் ,இனி ஹீரோ வேடத்தை தவிர்த்து வில்லன்/குணச்சித்திர வேடங்களில் பெரிதும் ரசிக்கப்படுவார். #கடல்,மங்காத்தா,வனயுத்தம்.

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1