google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஹி..ஹி...நானும் என் சினிமா பதிவுகளும்

Saturday, February 16, 2013

ஹி..ஹி...நானும் என் சினிமா பதிவுகளும்


ஏல....அறிவுச்செல்வா...!
எங்கல..போய்த் தொலைஞ்ச...சில்லாட்டப்பயல...!
நாலு கவிதை எழுதி வச்சுட்டு தேடுறேன் 

(அய்யோ...அண்ணன் ...கவிதையா...?
நாலு நாளாய் வயித்தாலப் போயிட்டு இருக்கு 
உங்க கவிதையைக் கேட்டா ஒரே போக்குத்தான்
பேசாம சினிமாவைப் பத்தியே எழுதுங்கன்னேன்...)

அடேய்...அறிவுச்செல்வா...!
இப்படிச் சொன்னாக்க எப்படில? 
ஒரு கவித எழுதுறது எம்புட்டுக் கஷ்டம் தெரியுமால..?

ஆனால் நீ சொல்றதும் சரிதாண்ல...
நான் எட்டு மாசமா  எழுதுறன்  இந்த வலைப்பூவில 
காதுல பூவச்சிக்கிட்டதுதான்ல....மிச்சம் 
தினம்  நூறு பேருகூடப் படிக்கலல...  
 இப்ப பாருல... ஆயிரத்த தாண்டிட்டுல......

எல்லாம் சினிமா மோகம்ல.....
என்னையும் சினிமாக்காரங்க ஆக்கிட்டாங்கல....

இப்பலாம்  கவித எழுதுறதும் கஷ்டமா இருக்குல...

எதைப்பற்றி எழுதுரதுனே தெரியலல.....

அரசியல பத்தி  எழுதுனா...?
அவதூறு வழக்கு  போட்டு அ(ழ)லய விடுறாங்கல..

மதத்தப் பத்தி எழுதுனா......?
கத்தி...துப்பாக்கிலாம் தூக்கிட்டு வருறாங்கல...

காதலப்பத்தி எழுதுனா.....?
அஃது இந்த இரண்டையும்விட மோசம்ல...
ஒரு கோஷ்டி காதலிக்கச் சொல்லுறாங்கல....
இன்னொரு கோஷ்டி காதலிக்கக் கூடாதுங்குறாங்கல..   .


சரி...டுவிட்டலாம்னா.....

உள்ளத்தூக்கிப் போடுறாங்கல.




































முகநூலத்திறந்தா...கவர்ச்சியோ கவர்ச்சில.....
அம்புட்டுக் கவர்ச்சி நடிகையும்...அங்கதான்ல...

இப்படியே போனா என்னத்தல எழுதுறது..?
அதுதான்ல...சினிமாவப் பத்தி எழுதுறேன் 
அது..சரில...வெளியே என்ன சத்தம் பாருல...?

(அண்ணேன்....மோசம் போயிட்டிங்க...
உங்க சினிமா பதிவுல ஏதோ' பஞ்ச்' அடிச்சிங்கிலாம்  
உங்கள பஞ்சராக்க ஒரு ரசிகர் பட்டாளமே வந்திருக்கு...
அண்ணேன்...இவிங்க...அவிங்களவிட மோசம்னேன்...
ஒவ்வொரு பெரிய நடிகர்களும் 
அந்தகாலத்து அரசர் போல...
பெரிய படை...பட்டாளங்கள் வச்சிருக்கிறாங்க 
நடிகர் போஸ்டருக்கே ரத்ததானம் பண்ணுவாங்க...
நடிகர் கட்டவுட்டுக்குப் பாலாபிசேகம் பண்ணுவாங்க...)

அடேய்...அறிவுச்செல்வா...!
இஃது அடிக்க வந்த கூட்டமில்லல.....
நல்லா கேளு...பரிதி! வாழ்க!-னு சத்தம் கேட்குது 
போய் பாருல...ஸ்விட்டு..பிரியாணி... வச்சிருப்பாங்கல..) 




(ஆமாம்...நீங்க பெரிய ஆளுதான்....அண்ணேன் 
சினிமா பதிவு படம்காட்டி.....
உங்க அ(றிவு)றுவை கவிதைகளையும்...
உங்க பகுத்தறிவு...? தத்துவங்களையும்...
எல்லாரையும் படிக்கவச்சிடுறீங்க...
யாரையாவது எதையாவது எழுதி 
விஸ்வரூபம் மாதிரி தடை பண்ண வையுங்க 
உங்களுக்கும் உலகப்பதிவர் பட்டம் கிடைக்கும் 
உங்கள் பதிவுகளும் உலகப் பிரபலமாகும் 
ஹி..ஹி...நீங்களும் உங்க சினிமா பதிவுகளும்)   
               
                                           ........................பரிதி.முத்துராசன்     

**************************************************************************
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1