google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: 'தல' அஜித்-சினிமாவா?வாங்க அசைபோடலாம்...?

Saturday, February 16, 2013

'தல' அஜித்-சினிமாவா?வாங்க அசைபோடலாம்...?


'தல'அஜீத்-
இப்போது உச்சத்தில் இருக்கின்ற இன்றைய தலை முறை நடிகர்களில் எவ்வித சினிமா பின்னணியும் இல்லாமல் திரைவானில் ஜொலிக்கும் ஒரு முன்னணி நடிகர்.


 அவர்களது ரசிகர்களால் 'தல' என்று அழைக்கப்படும் இவருடைய சினிமா பயணம் மேடு பள்ளம் நிறைந்தது ஆனாலும் அவருடைய நடிப்பு திறமை அவரை புகழின் உச்சத்தில் வைத்துள்ளது
























இங்கே பல்வேறு காலகட்டங்களில் வந்த எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பிடித்த அவரது 10 திரைப்படங்கள் சுருக்கமாக வசை போட்டு.........மன்னிக்கவும் .....அசை போட்டு....


1-காதல்கோட்டை

பிரபல இயக்குனர் அகத்தியனின் முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையில் இப்படம் புதிய கருத்தை சொன்னது...நேரில் பார்த்திராத (இப்போதைய இன்டர்நெட்-மொபைல் இல்லாத தொலைபேசி-கடிதம் காலம்) இரண்டு இதயங்கள் காதலுக்கு ஏங்கும்  காதலின் புதிய பரிணாமத்தை காட்சிப்படுத்தியது. அஜித்-தேவயானி நடிப்பில் மிகப்பெரிய வெற்றிப்படம் அஜித்துக்குச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் அகத்தியனுக்குச் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் பெற்று தந்த வெற்றிப்படம்


2-காதல் மன்னன்
சரண் இயக்கத்தில் பரத்வாஜ் இன்னிசையில்  தனது மூத்த மகள் காதலனுடன் ஓடியதால் காதலை வெறுக்கும் கிரிஷ்கர்னார்டின் இளையமகளைக் காதலித்துக் கடைசியில் திருமணம் செய்துகொள்ளும்  ஒரு  
 மெக்கானிக்காக யதார்த்தமான நடிப்பில்  அஜித்தின் வெற்றிப்படம்




3-வாலி
இயக்குனர் எஸ்.ஜெ.சூர்யா வின் புதிய முயற்சியாக அஜித் அண்ணன்-தம்பியாக  இரட்டை வேடங்களில் (அதில் ஓன்று-ANTI HERO)நடித்த இப்படம் அஜித்-க்கு  சிறந்த நடிகருக்கான  FILMFARE விருது பெற்றுத்தந்தது.அஜித்-சிம்ரன் நடிப்பில்  வணிக ரீதியிலும் வெற்றிப்படம்.






4-அமர்க்களம்
சரண் இயக்கத்தில் அஜித்-ஷாலினி நடித்த உடனடி வெற்றி காதல் திரைப்படம் அவர்கள் இருவரும் வாழ்க்கையில் இணைவதற்கும் இப்படம்  ஒர் உந்துசக்தி!. அஜித் இப்படத்தில் ஒர் இரக்கமற்ற போக்கிரியாக நடித்தார்  ஷாலினி போலிஷ் அதிகாரி குடும்பத்தினரால் எடுத்து வளர்க்கப்படும் பெண்.நிறைய திருப்பங்களுடன் விருவிருப்பான கதை.


5-தீனா
A.R.முருகதாஸ் இயக்கத்தில் அஜித் 'தல' என்று அழைக்கக் காரணமாக இருந்த திரைப்படம் அஜித்-லைலா இணைந்து நடித்த நிறைய வன்முறை சம்பவங்கள் நிறைந்த ஒரு கேடி(தாதா) கூட்டத்தின்  வீர தீர படம்


 
                                                   thanks-YouTube-prabhakaranstar1

 
6-சிட்டிசன்

இயக்குனர் சரவணன் சுப்பையா இயக்கத்தில் பல்வேறு திருப்பங்களுடன் செல்லும் கதைக்கு ஏற்ப பல்வேறு உருவங்களில் தோன்றி அஜித்தின் நடிப்புக்கு சவால் விட்ட இப்படமும்  இதில் அழிக்கப்பட்டதாகக் காட்டப்படும்  அத்திப்பட்டி கடல் கிராமம் கதை நம்பகத்தன்மை விமர்சனத்துக்குள்ளானது 
பெரிய வெற்றிப்படமில்லை ஆனாலும் அவரது நடிப்புப் பேசப்பட்டது 




7-வில்லன்
இயக்குனர் K.S.ரவிகுமார் இயக்கத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்த வெற்றிப்படம்  இப்படம் அஜித்-க்கு  இரண்டாவது முறையாகச் சிறந்த நடிகருக்கான  FILMFARE விருது பெற்றுத்தந்தது.தங்கள் குடும்பத்தை அழித்தவர்களைப் பழிவாங்கும் திரைக்கதை


8-வரலாறு
தொடர்ந்து தோல்வி படங்களாகத் தந்துகொண்டிருந்த அஜித் மீண்டும் இயக்குனர் K.S.ரவிகுமார் இயக்கத்தில் அசினுடன்  நடித்த பாக்ஸ் ஆபிசில் மிகப் பெரிய வெற்றிப்படம்கதை ஒன்றும் விசேஷமாக இல்லாத போதும் அஜித் நடிப்பு அவருக்கு மூன்றாவது முறையாகச் சிறந்த நடிகருக்கான  FILMFARE விருது பெற்றுத்தந்தது




9-பில்லா
இந்தி-DON தமிழில் 80-களில்  பில்லா-வாகி ரஜினிகாந்துக்கு வெற்றிதந்த இப்படம் மீண்டும் பில்லா-பெயரிலேயே விஸ்னுவர்த்தன் இயக்கத்தில்  அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றித் தந்தது.


10-மங்காத்தா
அஜித்தின்  50-வது திரைப்படமான இதில்  அவர் அர்ஜுன்,திரிஷா ,...வுடன் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த அதிரடி திரில்லர். ஆங்கிலப் படம்போல் 500-கோடிக்காகத் தாதா கூட்டங்கள் நடத்தும் கொலை,கொள்ளை,...இப்படியே மங்காத்தா சூதாட்டம் போல் கதையமைப்பு ....மிகப்பெரிய வெற்றிப்படம் அஜித் யதார்த்தமாக நடித்திருந்தார்




வாங்க அசைபோடலாம்...? 


என் பார்வையில் அஜித்தின் காதல்கோட்டை திரைப்படமே எல்லாவைகையிலும் மிகச் சிறந்த திரைப்படமாகக் கருதுகிறேன் ஆனால் வணிக ரீதியில் அதிரடி திரைப்படங்கள் செய்து ....'தல' சிலநேரங்களில் எல்லா நடிகர்கள் போன்றும் 'தாதா' நடிகராகிவிடுகிறார்  

அவரது பஞ்ச்  கடி அவரை சிலநேரங்களில் ஒஸ்தி நடிகர்கள் வரிசையில் நிர்க்கவைக்கிறது அதுதான் அவரது பில்லா-II போன்ற படங்களின் தோல்விஆனாலும் அவர் மிகச் சிறந்த நடிகராக அவ்வப்போது நிலைநாட்டுவதுதான் அவரது தனித்தன்மை .....

இவளவு நேரம் அசை போட்டதில்.........
தல' அஜித்..........அவரது  நடிப்பு திறமையே அவரது உயர்வுக்கு காரணம்  
அவரது அதிரடி திறமையும் பஞ்ச் கடியும்  அவரது வீழ்ச்சிக்கு காரணம்  

இது தமாஷ் பஞ்ச........தப்பா நினைக்காதீங்க.......

ஏய்..என் சினிமா வாழ்க்கையில....ஒவ்வொரு படியா கால்வலிக்க ஏறி இந்த உச்சத்துக்கு வந்தவன்டா  நான்  ....இப்படி ஒரேயடியாய் பொத்துன்னு கீழே தள்ள நினைச்சிங்க...ஏய்...நா ஒரு தல இல்ல.... இரண்டு தல இல்ல...கோடி தல'...டா ...ம்..ம்..பாத்துக்குங்க...!      

விரைவில் வெளிவரும்............... 
அவரது  வலை -யில் ஆஸ்கர் விருது மாட்டிக்க  வாழ்த்துவோம்



.............................................................பரிதி.முத்துராசன் 

****************************************************************************

  எனது இன்றைய நகைச்வை பதிவு.............


ஹி..ஹி...நானும் என் சினிமா பதிவுகளும் 
ஏல....அறிவுச்செல்வா...!
 எங்கல..போய் தொலைஞ்ச...சில்லாட்டப்பயல
.................................................................................
............................................................................................

***************************************************************************

இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து..................?

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1