google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: திருப்தியில் ராஜபக்சே! லட்டு திங்க ஆசையா?

Saturday, February 09, 2013

திருப்தியில் ராஜபக்சே! லட்டு திங்க ஆசையா?


ஏண்டா....அறிவுச்செல்வா!
திருப்பதியில் ராஜபக்சேக்கு 
கண்டனம் தெரிவிக்க 
கருப்புக்கொடி வாங்கிவா என்றால்
என்னத்தடா வாங்கி வந்தாய் ...?


அந்த ஆளு திருப்பதியில்
லட்டு திங்க வாயைத் திறக்க...
அருகில் நின்று நானும்
கருப்புக் கொடியைக்காட்ட...

அங்கே வந்த போலிசார்
பீச்சியடித்த தண்ணீரில்
கருப்புக் கொடியும் சாயம் போனதடா...
வெள்ளைக்கொடியாய் மாறிப்போனதடா! 
பெரிய அசிங்கமாப் போச்சுடா....
அப்புறம் அதிலேயே மூஞ்ச துடைச்சிட்டு 
வீடு வந்து சேர்ந்திட்டேன்டா....

இந்த கொடியாட்டும் போராட்டம் 
பெரிய அக்கப்போராட்டம்....
புதுசா ஏதாவது கண்டுபிடிக்க 
எவருக்கும் தெரியவில்லையடா....? 
நாம கொடியாட்டுனா 
அவன் சந்தோசமா கையாட்டுறான்...

எலி புளுக்கையை  எடுத்து எறிந்தால் 
பெருச்சாளி சாவுமாடா....?









































திருப்பதியில் அவிங்...ங்க போடல மொட்டை 
போட்டது மொட்டையும் சொட்டையும்  நமக்குதாண்டா

இதுக்குத்தான் கடவுளை நம்பாதேனு 
அந்த ஈரோட்டு கிழவர் புலம்பினார்..?
இப்பொது  இருக்கிற கிழடுகளால் 
ஈ...யைக்கூட விரட்ட முடியவில்லை?



திருப்பதி லட்டு சுவை 
பக்சேக்கும்தெரிஞ்சு போச்சுடா..
இனி தினமும் திருப்பதிக்கு 
இந்தப் பச்சே வந்தாலும் வரலாம்டா.....

இப்படியே போனால்..........
பழனிக்கும் பக்சே  வந்தாலும் வரலாம்
நாம் பார்த்துக்கொண்டு நிக்க... 

கையில் வழிய வழிய வடியும் 
பஞ்சாமிருதத்தை நக்கலாம்....


(அண்ணேன்.....
இருந்த கொடியையெல்லாம் 
மதிமுக,திமுக...காரங்களே 
மொத்தமா வாங்க்கிட்டாங்களாம்   


எங்கும் கிடைக்கவில்லை கருப்புக்கொடி
அதனால்தான் வெள்ளைக்கொடியில்  நானும்
கருப்புச் சாயம் போட்டேன்...........


அண்ணேன் ஒரு டவுட்டு...
இந்தியாவுக்கு அடிக்கடி 
இந்த  ராஜபக்சேவும் வருவது ...?.
 நம்ம ஆட்கள் காட்டும் 
கண்டனக் கறுப்புக்கொடியை 
டாடா..BYE..BYE  காட்டுவதாக நினைத்துக்கொண்டா.....?


                                               ...............................பரிதி.முத்துராசன்

******************************************************************************
                                             thanks-YouTube-Puthiya Thalaimurai

*********************************************************************************
 சில  ராஜபக்சே கீச்சு க(வெ)டிகள்....

எனக்கு அனைத்து நாடுகளிலுமே எதிர்ப்பு இருக்கே - ராஜபக்சே பெருமிதம் # பன்னியெல்லாம் பஞ்ச் டயலாக் பேசுதே..த்தூ

எனக்கு அனைத்து நாடுகளிலுமே எதிர்ப்பு இருக்கே - ராஜபக்சே பெருமிதம் # டெங்கு, எயிட்ஸ்க்கு கூடத்தான் உலகம் முழுக்க எதிர்ப்பு இருக்கு

எனக்கு அனைத்து நாடுகளிலுமே எதிர்ப்பு இருக்கே - ராஜபக்சே பெருமிதம் # நம்ம குடும்பத்துக்கு கவுரவம் தான் முக்கியம்.. த்தூஊ..

கொடும்பாவி எரிப்பது- கருப்புக்கொடி காட்டுவது நாங்களும் நாட்டில் இருக்கிறோம் என்று அரசியல் கட்சிகளின் நடத்தும் கேலிக்கூத்து.

***************************************************************************

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1